dinamalar telegram
Advertisement

கொத்தமங்கலத்தில் மண் ஆய்வு முகாம்

Share
ப.வேலூர்: கபிலர்மலை வட்டாரம் கொத்தமங்கலம் கிராமத்தில் திருச்செங்கோடு நடமாடும் மண் பரிசோதனை நிலைய வாகனத்தின் மூலம் மண் ஆய்வு முகாம் நடந்தது. இம்முகாமில் கலந்து கொண்ட விவசாயிகளிடையே, கபிலர்மலை வேளாண் உதவி இயக்குனர் கோவிந்தசாமி, மண் மற்றும் நீர் மாதிரிகளை ஆய்வு செய்து அதற்கேற்ப பயிரிட்டு ரசாயன உரங்களை குறைத்து பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்து, மண்வள அட்டை வழங்கினார். வேளாண் அலுவலர்கள் சவுந்தர்ராஜன் அன்புச்செல்வி, அருள்ராணி, உதவி வேளாண் அலுவலர் ராஜாமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement