dinamalar telegram
Advertisement

வாகனங்களுக்கு வாட்டர் சர்வீஸ்

Share
நாமக்கல்: ஆயுதபூஜையை முன்னிட்டு நாமக்கல்லில் வானங்களுக்கு, 'வாட்டர் சர்வீஸ்' செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. நாமக்கல்லில் லாரி பட்டறைகள், டேங்கர் லாரி, சரக்கு லாரிகள், வாகனங்கள் மற்றும் வர்த்தக நிறுனவங்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. அங்கு ஆயுதபூஜை விழா விமரிசையாக கொண்டாடப்படும். நேற்று, மோகனூர் சாலை, துறையூர் சாலை, சேலம் சாலை, பரமத்தி சாலைகளில் செயல்படும் வாட்டர் சர்வீஸ் ஸ்டேஷன்களில் பல்வேறு வாகனங்கள் வாட்டர் சர்வீஸ் செய்யப்பட்டன. அதில் பைக்குகளுக்கு, 150, கார், வேன், ஜீப் ஆகியவற்றுக்கு, 500, பஸ், லாரி ஆகியவற்றுக்கு, 1,000 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. நாமக்கல் நகர் பகுதியினர் ஏராளமானோர் தங்கள் வாகனங்களை வாட்டர் சர்வீஸ் செய்து பூஜைக்காக தயார்படுத்தினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement