dinamalar telegram
Advertisement

வாய்க்காலை தூர்வார மக்கள் வலியுறுத்தல்

Share
கரூர்: கரூர் ரத்தினம் சாலையில் வாகன போக்குவரத்து அதிகம். அங்கு சாக்கடை வாய்க்கால் செல்கிறது. அதில் குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கியுள்ளன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. துர்நாற்றமும் வீசுகிறது. பல நாட்களாக கொசு உற்பத்தியும் அதிகரித்துள்ளது. இரவு நேரத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை தூங்க முடியாமல் சிரமப்படுகின்றனர். தொற்று நோய் பரவும் வாய்ப்பும் உள்ளது. எனவே, வாய்க்காலை உடனடியாக தூர் வார நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என, மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement