dinamalar telegram
Advertisement

சாலை விபத்தில் தொழிலாளி பலி

Share
கரூர்: வெள்ளியணை அருகே நடந்த சாலை விபத்தில் டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி உயிரிழந்தார். கரூர் மாவட்டம், பாகநத்தம் நொச்சிப்பட்டியைச் சேர்ந்தவர் சரவணன், 23; டைல்ஸ் ஒட்டும் தொழில் செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு, நண்பர் சண்முகவேல், 23, என்பவருடன் ஹீரோ டீலக்ஸ் பைக்கில், வெள்ளியணை வெடிக்கப்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக சென்ற அரசு பஸ் மீது, பைக் நிலை தடுமாறி மோதியது. அதில், படுகாயமடைந்த சரவணன், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். சண்முகவேல் சிகிச்சை பெற்று வருகிறார். வெள்ளியணை போலீசார் விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement