dinamalar telegram
Advertisement

விஷவண்டு கூடு அழிப்பு

Share
குளித்தலை: குளித்தலை அடுத்த, சத்தியமங்கலம் பஞ்., அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் மலைக்கோவில் ரோப் கார் பணி முடியும் தருவாயில் உள்ளது. இதில் மலை மேல் உள்ள ரோப்கார் தரைத்தளத்தில் பணிகள் முடிக்கப்பட்டு அறைகள் பூட்டப்பட்டன. அறை பயன்பாட்டுக்கு இல்லாததால் அறையில், 10க்கும் மேற்பட்ட இடத்தில் விஷவண்டு கூடு இருந்தது. இதுகுறித்து, கோவில் செயல் அலுவலர் ராமமூர்த்தி, முசிறி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, நிலைய அலுவலர் முனியாண்டி தலைமையிலான வீரர்கள், விஷவண்டு கூடுகளை அழித்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement