dinamalar telegram
Advertisement

மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று

Share
கரூர்: கரூரில், நேற்று, 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இரண்டாம் அலையால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் தொற்று குறைந்து வருகிறது. நேற்று, கரூர் மாவட்டத்தில், 11 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்றிலிருந்து குணமடைந்த, 24 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை, மாவட்டத்தில், 23 ஆயிரத்து, 788 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 23 ஆயிரத்து, 250 பேர் குணமடைந்துள்ளனர். 355 பேர் தொற்றால் இறந்துள்ளனர். தற்போது, 183 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement