dinamalar telegram
Advertisement

பேரிடர் தணிக்கும் தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Share
குளித்தலை: சர்வதேச பேரிடர் தணிக்கும் நாள், ஆண்டுதோறும் அக்., 13ல் தீயணைப்பு துறையினரால் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி குளித்தலை கடம்பர் கோவில் காவிரி ஆற்றில் நேற்று மாலை, நகர்ப்புற கிராமப்புற மக்கள் புயல் மற்றும் வெள்ளம், பூகம்பம், தீ விபத்து ஏற்படும்போது தங்களை எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தொடர்ந்து, வெள்ளத்தில் சிக்கிக்கொள்ளும் பொது மக்களை தீயணைப்பு வீரர்கள் காப்பாற்றுவது குறித்து செயல் விளக்கமளிக்கப்பட்டது. இதேபோல் தேவையான உபகரணங்களை பயன்படுத்தி பாதிக்கப்பட்ட பொது மக்களை வெள்ளத்தில் இருந்து பாதுகாப்பாக மீட்கலாம் என்று, செயல் விளக்கமளித்தனர். ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளர் முரளிதரன், முசிறி தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் முனியாண்டி, வருவாய் துறையினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement