dinamalar telegram
Advertisement

எறிபத்த நாயனார் பூக்குடலை விழா: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

Share
கரூர்: கரூர் எறிபத்த நாயனார் பூக்குடலை விழா கோலாகலமாக நடந்தது. ஆண்டுதோறும் கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் எறிபத்த நாயனார் பூக்குடலை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டு, பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் விழா நடந்தது. அங்கு, எறிபத்த நாயனார், புகழ் சோழநாயனார், சிவகாமி ஆண்டார் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. பின், யானை வாகனம் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது. பூ பறித்துக் கொண்டு சிவகாமி ஆண்டார் நடந்து வருவது போலவும், அப்போது மதம் பிடித்து ஓடிய யானை பூக்குடலையை தட்டி விட்டவுடன் வேல்கம்பு உள்ளிட்டவற்றுடன் அந்த யானையை சிவபக்தர்கள் துரத்தி வருவது போலவும், பின்னர் விழாமேடையில் வைத்து மழு எனும் ஆயுதத்தால் எறிபத்த நாயனார் யானையின் தும்பிக்கையை வெட்டியவுடன் அது கீழே சாய்வதையும் போல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் புகழ்சோழ மன்னர் வேடமணிந்த ஒருவர், தான் வைத்திருந்த வாளால் தன்னை வெட்டும்படி கேட்டு கொண்டார். அப்போது பசு வாகனத்தில் அலங்காரவள்ளியுடன் காட்சிதந்த பசுபதீஸ்வரர் இறந்த யானையை உயிர்த்தெழ செய்து பூமழை பொழிந்து ஆசீர்வாதம் செய்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement