dinamalar telegram
Advertisement

ரூ.2.70 கோடி நிவாரண நிதி: அமைச்சர் வழங்கல்

Share
கரூர்: கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி, நேற்று முன்தினம் கரூரில் நடந்தது. நிதி வழங்கி, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது: கொரோனா தொற்றினால் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு தலா, மூன்று லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படுகிறது. அதனடிப்படையில் கரூர் மாவட்டத்தில் ஒற்றை பெற்றோரை இழந்த, 88 குழந்தைகள், இரண்டு பெற்றோர்களையும் இழந்த, 2 குழந்தைகள் என மொத்தம், 90 குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளனர். அதில், 50 குழந்தைகளுக்கு தலா, மூன்று லட்சம் ரூபாய் வீதம், 1.50 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள, 40 குழந்தைகளுக்கு வங்கி கணக்குகளில் ஏற்கனவே வரவு வைக்கப்பட்டுவிட்டது. மொத்தம், 90 குழந்தைகளுக்கு, 2.70கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். கலெக்டர் பிரபுசங்கர், எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம், சிவகாம சுந்தரி உட்பட பலர் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement