dinamalar telegram
Advertisement

கிருஷ்ணராயபுரத்தில் வெண்டை சாகுபடி தீவிரம்

Share
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் விவசாயிகள் வெண்டை சாகுபடி பணியில் ஈடுபட்டுள்ளனர். கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் மகிளிப்பட்டி, உடையந்தோட்டம், புனவாசிப்பட்டி, பழைய ஜெயங்கொண்டம், லட்சுமணம்பட்டி, பஞ்சப்பட்டி ஆகிய இடங்களில் விவசாயிகள் பரவலாக காய்கறி சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது பூக்கள் பூத்து காய்கள் பிடித்துள்ளன. அவற்றை அறுவடை செய்து உள்ளூர் வாரச் சந்தையான லாலாப்பேட்டை, பழைய ஜெயங்கொண்டம், குளித்தலை உழவர் சந்தை ஆகிய பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப் படுகிறது. வெண்டை கிலோ, 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement