dinamalar telegram
Advertisement

சீன எல்லையோர சுரங்கப் பாதை: இறுதிக்கட்ட பணியை தொடங்கி வைத்தார் ராஜ்நாத் சிங்

Share
புதுடில்லி: அசாம் - அருணாச்சல் மாநிலங்களுக்கிடையே மழை, பனி காலங்களிலும் தடைப்படாத போக்குவரத்தை உறுதி செய்யும் வகையிலான சேலா மலைப்பாதையில் இரு வழி சுரங்கம் அமைப்பதன் இறுதிக் கட்ட பணிகளை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்.


சேலா சுரங்கப்பாதை 3 கி.மீ., தூர உலகின் மிக நீளமான இருவழிச் சுரங்கப்பாதையாகும். 13,000 அடி உயரத்திற்கு மேல் இதனை எல்லை சாலை நிறுவனம் அமைத்து வருகிறது. 2019 பிப்ரவரியில் பிரதமர் மோடி இச்சுரங்கப்பாதை பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதன் பிறகு பணிகள் தொடங்கி துரிதமாக நடைப்பெற்று வருகிறது. கோவிட் மற்றும் மோசமான வானிலை காலங்களிலும் பணிகள் வேகமெடுத்துள்ளது. ஜூன் 2022-ல் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.



அசாம் மாநிலத்தின் பலிபரா - அருணாச்சலின் தவாங் இடையிலான தேசிய நெடுஞ்சாலை வழியே இந்த சேலா சுரங்கப் பாதை அமைகிறது. இதன் மூலம் பயண நேரம் ஒரு மணி நேரம் குறையும். அருணாச்சலுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும். மிக முக்கியமாக அசாமின் தேஸ்பூரை தலைமையிடமாக கொண்டுள்ள ராணுவத்தின் நான்காம் படையை விரைவாக சீன எல்லையோர பகுதியான தவாங்கிற்கு அனுப்ப முடியும்.

மேலும் அனைத்து கால நிலைகளிலும் தடையின்றி இந்த சாலை வழியாக பயணிக்கலாம் என்பது இதன் சிறப்பு.



இந்நிலையில் இந்த சுரங்கப்பாதையின் முக்கியமான இறுதிக்கட்ட பணியினை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் டில்லியில் இருந்த படி காணொளி காட்சி மூலமாக பார்வையிட்டார். “எல்லை சாலை நிறுவனம் நாட்டின் பாதுகாப்பு மற்றும் சமூக-பொருளாதார வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டுள்ளது. கடின உழைப்பின் மூலம் எல்லாம் அடைய முடியும் என்ற குறிக்கோளுக்கு உண்மையாக இருக்கிறது. ரோஹ்தங்கில் கட்டப்பட்ட அடல் சுரங்கம் முதல் தற்போதைய சேலா சுரங்கம் வரை எல்லை சாலை நிறுவனத்தின் கடந்த சில ஆண்டுகால சாதனைகள் குறித்து ஆராய்ச்சியே செய்யலாம்” என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (3)

  • Gopalakrishnan S -

    ஊழல் கான்கிராஸ் அரசாங்கத்திற்கு இதெல்லாம் செய்ய வேண்டும் என்று தோன்றாதது ஏன் ?

    • N.Purushothaman - Cuddalore

      கடந்த ஆட்சியில் ராணுவத்துறை அமைச்சர் பாராளுமன்றத்தில் எல்லையில் எந்த ஒரு மேம்பாட்டையும் மேற்கொள்ளாமல் இருப்பது தான் நமக்கு பாதுகாப்புன்னு சொன்னார் ...இதை சொல்ல தான் வெக்கப்படவில்லைன்னும் சொன்னார் ...

  • Gopalakrishnan S -

    ஊழல் கான்கிராஸ் அரசாங்கத்திற்கு இதெல்லாம் செய்ய வேண்டும் என்று தோன்றாதது ஏன் ?

Advertisement