dinamalar telegram
Advertisement

ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை: கரூரில் அலைமோதிய கூட்டம்

Share
கரூர்: ஆயுதபூஜையையொட்டி, கரூரில் பூக்கள், பொரி, வாழைத்தார், பழங்கள் விற்பனை சூடுபிடித்தது. பூ மார்க்கெட், உழவர் சந்தை, காமராஜ் தினசரி மார்க்கெட்டில் நேற்று கூட்டம் அலைமோதியது.
ஆயுத பூஜை இன்றும், சரஸ்வதி பூஜை நாளையும் கொண்டாடப்படுகிறது. இதற்காக, கரூர் அருகே பசுபதிபாளையம், சீனிவாசபுரம், கருப்பாயி கோவில் தெரு உள்ளிட்ட இடங்களில் பொரி தயாரிப்பு கடந்த ஒரு வாரமாக விறுவிறுப்பாக நடந்தது. ஒரு மூட்டை பொரி, 750 முதல், 800 ரூபாய்; நிலக்கடலை கிலோ, 120 -140; பொட்டுக்கடலை, 100 - 110; ஆப்பிள், கொய்யா, ஆரஞ்சு, சாத்துக்குடி சராசரியாக, கிலோ, 80 -120 ரூபாய் வரை விற்றது. பெரிய வாழை மரம் ஜோடி, 400 முதல், 600 ரூபாய்; சிறிய வாழை மரம், 50 ரூபாய் வரை விற்பனையானது. கரூர் ரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ள பூ மார்க்கெட்டில், மல்லிகைப்பூ கிலோ, 800 முதல், 1,000 ரூபாய்; முல்லைப்பூ, 500 - 600 ரூபாய்; ஜாதிப்பூ, 500 -600 ரூபாய்; அரளி, 500- 600 ரூபாய்; செண்டு மல்லி, 80 ரூபாய், மரிக்கொழுந்து, நான்கு கட்டு, 120 ரூபாய்க்கும் விற்றது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement