dinamalar telegram
Advertisement

மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு

Share
கரூர்: மாயனூர் கதவணைக்கு, நேற்று தண்ணீர் வரத்து சற்று அதிகரித்தது. கரூர் அருகே உள்ள மாயனூர் கதவணைக்கு, நேற்று முன்தினம் காலை, விநாடிக்கு, 3,060 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து, 3,698 கன அடியாக அதிகரித்தது. காவிரியாற்றில் குறுவை சாகுபடி பணிக்காக, 2,678 கன அடி தண்ணீரும், நான்கு பாசன வாய்க்காலில், 1,020 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது. அமராவதி அணை நிலவரம்: திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் உள்ள அமராவதி அணைக்கு வினாடிக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 581 கன அடி தண்ணீர் வந்தது. ஆற்றில், 500 கன அடி தண்ணீரும், புதிய வாய்க்காலில், 350 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 82.48 அடியாக இருந்தது. மழை நிலவரம்: கரூர் மாவட்டத்தில், நேற்று காலை, 8:00 மணி வரை பெய்த மழையளவு விபரம் (மி.மீ.,) கிருஷ்ணராயபுரம், 1, மாயனூர், 1, பாலவிடுதி, 8 ஆகிய அளவுகளில் மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக, 0.83 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement