dinamalar telegram
Advertisement

அசுத்த நீரை குடிநீராக மாற்றும் ஜெல்!

Share
Tamil News
துாய்மையான குடிநீருக்குத் தட்டுப்பாடு உள்ள பகுதிகள் இந்த 21ஆம் நுாற்றாண்டிலும் உள்ளன. அப்பகுதிகளில் இருப்போருக்கு வரமாக வந்திருக்கிறது ஒரு தொழில்நுட்பம்.

அமெரிக்காவிலுள்ள டெக்சாஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கிய இது ஒரு ஹைட்ரோஜெல் மாத்திரை வடிவில் உள்ளது. இதை அசுத்த நீரில் போட்டால், ஒரு மணி நேரத்தில் கரைந்து, அந்த நீரில் உள்ள கிருமிகள் 99.99 சதவீதம் கொன்றுவிடுகிறது. மேலும் அதில் வேறு எந்த பக்கவிளைவுகளும், கசடு களும் இருக்காது என்பதால், அந்த நீர் குடிப்பதற்கு ஏற்றதாக மாற்றிவிடுகிறது.

மாத்திரை வடிவில் இருக்கும் ஹைட்ரோஜெல், நீரில் ஊறியதும் ஹைட்ரஜன் பெராக்சைடை வெளியேற்றுகிறது. இது, கிருமிகளை உடனடியாக கொல்லும். இதைத் தவிர வேறு எந்த வேதி வினைகளையும் அது வெளியிடாது என்பதால், அந்த வில்லையை வெளியே எடுத்து வீசி விடலாம். இந்த முறைக்கு மின்சாரமோ, எரிபொருளோ தேவையில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement