dinamalar telegram
Advertisement

தைவான் கட்டடத்தில் தீ: 46 பேர் பலி

Share
தைபே: தைவானின் கவோசியுங் நகரில் உள்ள 13 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 46 பேர் உயிரிழந்தனர். 41 பேர் காயமடைந்தனர்.


அந்நாட்டு நேரப்படி, இன்று அதிகாலை 3 மணியளவில் ஏற்பட்ட தீவிபத்து, அடுத்தடுத்து தளங்களுக்கும் பரவியது. இதனால், கரும்புகை வான் வரை பவியது. தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் மீட்டு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் தீயை பல சவால்களுக்கு மத்தியில் அணைத்தனர். இந்த சம்பவத்தில் 46 பேர் உயிரிழந்ததும், 41 பேர் காயமடைந்துள்ளதையும் அதிகாரிகள் உறுதி செய்தனர்.

இந்த கட்டடத்தில் முதல் 5 தளங்கள் வணிக பயன்பாட்டிற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டிருந்தது. தீ விபத்து ஏற்பட்ட போது அங்கு யாரும் இல்லை. 7 முதல் 11 தளங்களில் இருந்தவர்கள் தான் அதிகளவில் உயிரிழந்துள்ளனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (2)

  • N.Purushothaman - Cuddalore,மலேஷியா

    ஆழ்ந்த இரங்கல்கள் ....

  • Krishnan - Chennai,யூ.எஸ்.ஏ

    சீன அரசு எதிரி நாட்டில் என்னவேண்டுமானாலும் செய்யும்.. தைவான் தான் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்..

Advertisement