dinamalar telegram
Advertisement

வழிபாட்டு தலங்களில் வெள்ளி, சனி, ஞாயிறுக்கிழமைகளில் வழிபட பக்தர்களுக்கு அனுமதி

Share
சென்னை: எல்லா வழிபாட்டு தலங்களிலும், வெள்ளி, சனி, ஞாயிறு அன்றும் வழிபடுவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.


தமிழகத்தில், கோவிட் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அக்.,31 வரை அமலில் உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழகத்தில் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வழிபாட்டு தலங்களையும் மூட தமிழக அரசு கட்டுப்பாடு விதித்திருந்தது. அந்த நாட்களில் பொதுமக்கள் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நவராத்திரி, விஜயதசமி பண்டிகை காலத்தில் வழிபாட்டு தலங்களை திறக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


இந்நிலையில் பண்டிகை காலங்களில் கோவிட் நோய் தொற்று பரவலை தொடர்ந்து கண்காணிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆலோசனை நடந்தது.இதனை தொடர்ந்து , தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:

*அனைத்து வகை கடைகள், உணவகங்கள் மற்றும் ஓட்டல்கள் இரவு 11 மணி வரை இயங்கலாம்

*அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு உள்பட அனைத்து நாட்களிலும் இன்று முதல் பொது மக்கள் வழிபாட்டிற்கு அனுமதி

* அனைத்து டியூசன் மையங்கள், அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் ஆகியவையும் இன்று முதல் செயல்பட அனுமதி. இவை இன்று முதல் அமலுக்கு வருகிறது.


வரும் நவ.,1ம் தேதி முதல் பின்வரும் செயல்பாடுகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

* மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படும் மாதாந்திர மக்கள் தொடர்பு முகாம்கள் நடத்தலாம்

* தனியார் நிறுவனங்கள் நடத்தும் பொருட்காட்சிகள் உரிய கோவிட் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்படலாம்

* மழலையர் விளையாட்டு பள்ளிகள், நர்சரி பள்ளிகள், அங்கன்வாடி பள்ளிகள் முழுமையாக செயல்படலாம். காப்பாளர், சமையலர் உள்பட அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.

* ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்கு செல்ல பொது மக்களுக்கு அனுமதி

*திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் 100 நபர்கள் பங்குபெற அனுமதி

*இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 பேர் கலந்து கொள்வதற்கு அனுமதி

*ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் உரிய கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.

*திருவிழாக்கள், அரசியல், சமுதாய மற்றும் கலாசார நிகழ்ச்சிகளுக்கு நடைமுறையில் உள்ள தடை தொடரும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (83)

 • தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா

  ஹிந்துக்களுக்கு வாரம் மூன்று நாட்கள் தங்கள் கோயிலுக்கு சென்று வழிபடும் உரிமை கிடைத்ததே ... கும்பலுக்கு எரிச்சலா இருக்கு இதை இங்கே உள்ள கருத்துக்கள் மூலம் உணர முடியுது

 • M S RAGHUNATHAN - chennai,இந்தியா

  பக்தர்களுக்கு ஒரு வேண்டுகோள். தயவு செய்து உண்டியலில் காணிக்கை செலுத்தாதீர்கள். விரும்பினால் கோயிலில் பணி செய்யும் அர்ச்சகர்கள், பூசாரிகள், அவர்களின் உதவியாளர்கள் ( HRCE அலுவலர்கள் தவிர ) ஆகியோருக்கு கொடுத்து உதவவும். உண்டியல் பணத்தில் HRCE அதிகாரிகள் கொள்ளை அடிக்கின்றனர். சமோசா, இனிப்பு, மதிய உணவு என்று அவர்களின் கூட்டத்திற்கு செலவழிக்கிறார்கள். EO, JC, AC ஆகியோர்க்கும், அறநிலைய அமைச்சர், கமிஷனர் ஆகியோருக்கும் innova car வாங்குவது உண்டியல் பணத்தினால் தான். தர்ஷன சீட்டு முறையை ரத்து செய்யவும். VIP களுக்கு கோயிலில் தரும் மரியாதயை நெறிப் படுத்தவும். இறைவன் முன் அனைவரும் சமம் என்றால் ஏன் ஸ்பெஷல் treatment. ஆக திமுக அரசின் முதல் சறுக்கல். போராட்டத்திற்கு பயந்து இந்த முடிவு. மக்கள் corona பாதுகாப்பு விதிகளை விடாமல் கடைப் பிடிக்க வேண்டும். இன்று விஜய தசமி. வெற்றி நாள்.

 • Oru Indiyan - Chennai,இந்தியா

  வீரமில்லாத மணிக்கு பல்ப்

 • Milirvan - AKL,நியூ சிலாந்து

  அடிக்க வேண்டியது, பதுக்க வேண்டியது, மாற்ற வேண்டியது, திருட வேண்டியது, உருக்க வேண்டியது, கடத்த வேண்டியது எல்லாம் முடிச்சாச்சு போல.. கேடு கெட்டவர்கள்.. தமிழக ஹிந்துக்களின் அறியாமை அவலமானது.. 80 சதமான ஹிந்துக்களின் வழிபாட்டு ஸ்தல காணிக்கை வருமானங்களை கொள்ளையிடும் அரசு, 15 சதமான முசுலீமுகலின் வழிபாட்டு ஸ்தலங்களின் பெயரில் தமிழகமெங்கும் இருக்கும் எத்தனையோ இடங்களின் வாடகையை(ஆண்டுதோறும் கோடிக்கணக்கில்) கை வைக்க துணிவார்களா..? அதிக மக்களின் வருவாய் அதிகமென்றால் சிறுப்பான்மை மக்களின் வருமானமும் உண்டுதானே?

 • iloveindia - Ramanathapuram,இந்தியா

  கோவில்கள் திறக்க வேண்டும் என்று ஆதங்கப்பட்ட யாருமே திறந்தற்கு பாராடடவில்லையே ?

Advertisement