dinamalar telegram
Advertisement

மிருகண்டா அணை, செண்பகத்தோப்பு அணை முழு கொள்ளளவை எட்டியதால் நீர் திறப்பு

Share
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே மிருகண்டா அணை, செண்பகத்தோப்பு அணை முழு கொள்ளளவை எட்டியதால் உபரி நீர் திறக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே மிருகண்டா அணை, 22.97 அடி உயரத்துடன், 87.23 மில்லியன் கன அடி நீர் கொள்ளளவுடன் உள்ளது. தற்போது அணை, 21 அடியுடன், 76.250 மில்லியன் கன அடி நீர் நிரம்பியுள்ள நிலையில், அணைக்கு, 287 கன அடி வீதம் நீர் வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து அணையிலிருந்து வினாடிக்கு, 500 கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டது. உபரி நீர் கலசப்பாக்கம் வட்டத்தில் உள்ள, 17 ஏரிகளுக்கு செல்கிறது. செண்பகத்தோப்பு அணை, 62.32 அடி உயரத்துடன், 287.200 மில்லியன் கன அடி நீர் கொள்ளளவுடன் கட்டப்பட்டுள்ளது. தற்போது அணை, 56.42 அடியுடன், 227.610 மில்லியன் கன அடிநீர் கொள்ளளவை எட்டியுள்ளது. வினாடிக்கு, 500 கன அடி வீதம் நீர் வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து அணையிலிருந்து வினாடிக்கு, 1,000 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் நாகநதி, கமண்டல நாகநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றின் கரையோரம் உள்ள சந்தவாசல், கண்ணமங்கலம், நடுக்குப்பம், காமக்கூர், பாளையம், அக்ராபாளையம் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராம மக்களை பாதுகாப்பாக இருக்கும்படி பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், ஆற்றில் யாரும் குளிக்க வேண்டாம். கால்நடைகளை ஆற்றில் மேய்ச்சலுக்கு விட வேண்டாம் என, தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement