dinamalar telegram
Advertisement

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்ட பஞ்.,களை தி.மு.க.,அள்ளியது

Share
வேலூர்: வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, மாவட்டங்களில், மாவட்ட பஞ்.,களை தி.மு.க., கைப்பற்றியது.
வேலூர் மாவட்டத்தில், வேலூர், அணைக்கட்டு, காட்பாடி, கே.வி. குப்பம், குடியாத்தம், பேரணாம்பட்டு, கணியம்பாடி ஆகிய ஏழு ஒன்றியங்களில், 14 மாவட்ட கவுன்சிலர்களுக்கான தேர்தல் நடந்தது. இதில், தி.மு.க.,- 13, காங்., - 1 என வெற்றி பெற்றது.


* ராணிப்பேட்டை மாவட்டத்தில், அரக்கோணம், சோளிங்கர், நெமிலி, காவேரிப்பாக்கம், வாலாஜா, ஆற்காடு, திமிரி ஆகிய ஏழு ஒன்றியங்களில், 13 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில், தி.மு.க., - 12, காங்., 1 இடத்தில் வெற்றி பெற்றது.


* திருப்பத்தூர் மாவட்டத்தில், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, கந்திலி, நாட்றம்பள்ளி, ஆலங்காயம், மாதனூர் ஆகிய ஆறு ஒன்றியங்களில், 13 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில், தி.மு.க., 11, காங்., - வி.சி., தலா, -1, என வெற்றி பெற்றது. அ.தி.மு.க., - தே.மு.தி.க., - பா.ம.க., - பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement