dinamalar telegram
Advertisement

40 மூட்டை பான்பராக் கடத்தல்: கர்நாடகாவை சேர்ந்த 2 பேர் கைது

Share
சேலம்: லாரியில் கடத்தி வந்த, 40 மூட்டை பான்பராக்கை பறிமுதல் செய்த போலீசார், கர்நாடகாவை சேர்ந்த இருவரை கைது செய்தனர். சேலம், கருப்பூர் போலீசார், நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு, ஓமலூர் சுங்கச்சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, காய்கறி ஏற்றிவந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், காய்கறி நடுவே, குட்கா மூட்டைகள் மறைத்து வைத்திருந்தது தெரிந்தது. கடத்தி வரப்பட்ட, 1.92 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 40 மூட்டைகளை, மினி லாரியுடன், போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் கடத்திவந்தது, கர்நாடகா, மைசூரை சேர்ந்த விவேக்ராஜ், 29, ஜூனைத்கான், 23, என தெரிந்தது. அவர்களை, போலீசார் கைது செய்து விசாரித்ததில், பெங்களூருவில் இருந்து விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்துக்கு கடத்த முயன்றதாக தெரிவித்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement