dinamalar telegram
Advertisement

மேட்டூர் அனல்மின் நிலையங்களில் பாய்லர் கோளாறு: மின் உற்பத்தி பாதிப்பு

Share
மேட்டூர்: மேட்டூர் அனல்மின் நிலையங்களில் பாய்லர் டியூப் பஞ்சரால் மின் உற்பத்தி பாதித்தது. மேட்டூர் பழைய அனல்மின் நிலையத்தில் ஒரு அலகில், 210 வீதம், 4 அலகுகளில், 840 மெகாவாட், புதிய அனல்மின் நிலையத்தில், 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு பாய்லர் டியூப் பஞ்சர் ஆனதால், 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதித்தது. நேற்று காலை பழைய அனல்மின் நிலையத்தில், 3 வது அலகில் டியூப் பஞ்சர் ஏற்பட்டதால், 210 மெகாவாட் உற்பத்தி பாதித்தது. இரு அனல்மின் நிலையங்களில் கோளாறு காரணமாக, 1,440 மெகாவாட் மின்சாரத்திற்கு பதிலாக, 630 மெகாவாட் மின்சாரமே நேற்று உற்பத்தியானது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், நிலக்கரி பற்றாக்குறை காரணமாக, தற்காலிகமாக மின் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளதாக. மின்வாரிய தொழிலாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement