dinamalar telegram
Advertisement

பேராசிரியர் நியமனத்துக்கு பி.ஹெச்டி., கட்டாயம்; மேலும் 3 ஆண்டு அவகாசம்

Share
சேலம்: பல்கலை துறைகளில், உதவி பேராசிரியர் நியமனத்துக்கு பி.ஹெச்டி., கட்டாயம் எனும் உத்தரவை அமல்படுத்த, யு.ஜி.சி., மேலும் மூன்றாண்டு அவகாசம் அளித்துள்ளது.
மத்திய, மாநில அரசுகளின் பல்கலை துறைகளில், முதுகலை படிப்புடன், 'நெட், செட்' தேர்வுகளில் தேர்ச்சி அல்லது பி.ஹெச்டி., முடித்தவர்கள், உதவி பேராசிரியராக நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். உயர்கல்வி தரத்தை மேம்படுத்த, உதவி பேராசிரியர் நியமனத்துக்கு, பி.ஹெச்டி., கட்டாயம் எனும் உத்தரவை, 2021 ஜூலை, 1 முதல் அமல்படுத்த, பல்கலை மானியக்குழு உத்தரவிட்டிருந்தது. இதுகுறித்து, பல்கலை மானியக்குழு செயலர் ரஜ்னீஷ் ஜெயின், பல்கலை துணைவேந்தர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், '2018ல் வெளியிட்ட உத்தரவில், 2021 ஜூலை 1 முதல், பல்கலை உதவி பேராசிரியர் நியமனத்துக்கு பி.ஹெச்டி., தகுதி கட்டாயம் என குறிப்பிடப்பட்டிருந்தது. கொரோனாவால் மூன்று ஆண்டு அவகாசம் அளித்து, 2023 ஜூலை, 1 முதல், உதவி பேராசிரியர் நியமனத்துக்கு பி.ஹெச்டி., தகுதி கட்டாயம் என்பதை அமல்படுத்த வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement