dinamalar telegram
Advertisement

மேட்டூர் அணை நீர்வரத்து 28,394 கனஅடியாக உயர்வு

Share
மேட்டூர்: மேட்டூர் அணை நீர்வரத்து நேற்று, 28,394 கனஅடியாக உயர்ந்தது. மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி. தமிழக-கர்நாடகா எல்லையிலுள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தீவிரம் அடைந்துள்ள பருவ மழையால் நேற்று முன்தினம் வினாடிக்கு, 19 ஆயிரத்து, 68 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து நேற்று, 28 ஆயிரத்து, 394 கனஅடியாக உயர்ந்தது. டெல்டா பாசன நீர் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்று முன்தினம், 82.92 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று, 85.17 அடியாக உயர்ந்தது. கூடுதல் நீர்வரத்தால் அணை நீர்மட்டம் ஒரே நாளில், 2 அடியும். நீர் இருப்பு, 2 டி.எம்.சி.,யும் அதிகரித்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement