dinamalar telegram
Advertisement

ஆற்றில் சாய துணிகள் அலசல்: மூன்று வேன்கள் பறிமுதல்

Share
பள்ளிபாளையம்: நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே ஆற்றில் அலசிய மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள துணிகள், மூன்று வேன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. துணிகள் அலசிய கும்பல் காட்டு பகுதி வழியாக தப்பிச் சென்றது. இதுகுறித்து, குமாரபாளையம் மாசுகட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் செல்வகுமார் கூறியதாவது: பள்ளிபாளையம் அருகே சமயசங்கிலி பகுதியில் காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு சாய ஆலையில் பிரின்டிங் செய்யப்பட்ட துணிகளை, வேனில் கொண்டு வந்த சிலர் அலசினர். துறை அதிகாரிகள், தாசில்தார் தமிழரசி, வருவாய்துறை அதிகாரிகள், போலீசார் சென்றோம். பேட்டரி மின் விளக்கு பொறுத்தப்பட்டு, சாயத்துணிகளை அலசும் பணியில் சிலர் ஈடுபட்டு கொண்டிருந்தனர். எங்களை கண்டதும், அங்கிருந்தவர்கள் துணிகளையும், வேனையும் அங்கயே விட்டு விட்டு காட்டுக்குள் தப்பிச் சென்றனர். மூன்று லட்சம் மதிப்புள்ள சாய துணிகள், மூன்று வேனையும் பறிமுதல் செய்து, பள்ளிபாளையம் போலீசில் ஒப்படைத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement