dinamalar telegram
Advertisement

மனைவியை கொல்ல முயன்ற கணவர் கைது

Share
கிருஷ்ணகிரி: பாகலூர் அருகே, மனைவியை கத்தியால் குத்தி கொல்ல முயன்ற கணவரை, போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூர் அருகே காரப்பள்ளியை சேர்ந்தவர் அஸ்வத் நாராயணன், 56, கூலித்தொழிலாளி; இவரது இரண்டாவது மனைவி சரோஜம்மா, 40; இவரது நடத்தையில் சந்தேகப்பட்ட அஸ்வந்த் நாராயணன் அடிக்கடி அவரிடம் தகராறு செய்து வந்துள்ளார். கடந்த, 11ல், குடிபோதையில் வந்த அவர், கத்தியால் சரோஜம்மாவை கால், தோள்பட்டையில் குத்தியுள்ளார். படுகாயமடைந்த சரோஜம்மா ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது புகார்படி, பாகலூர் போலீசார் அஸ்வந்த் நாராயணனை கைது செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement