dinamalar telegram
Advertisement

கோவில் நிலத்தை மீட்க தடையில்லை: திருத்தொண்டர் சபை நிறுவனர் தகவல்

Share
கரூர்: ''மாவட்டத்தில், கோவில் நிலங்களை மீட்க உயர்நீதிமன்றத்தில் எந்தவிதமான தடையும் விதிக்கப்படவில்லை,'' என, திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதா கிருஷ்ணன் கூறினார்.
கரூரில் நடந்த எறிபத்த நாயனார் பூக்குடலை விழாவில் பங்கேற்ற அவர் கூறியதாவது: தமிழகத்தில் திருக்கோவில்களுக்குச் சொந்தமான, ஏழு லட்சம் ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்புக்குள்ளாகியுள்ளன. ஐந்து லட்சம் ஏக்கர் நிலங்களுக்கான பட்டா உள்ளன. கரூர் மாவட்டத்தில் மட்டும், 4,000 ஏக்கர் நிலங்கள் கோவிலுக்குச் சொந்தமானவை. 12 ஆண்டுகள் ஒரே இடத்தில் குடியிருந்தால் தனக்கு சொந்தமாகிவிடும் என நினைக்கின்றனர். இந்த சட்ட வரையறை ஹிந்து சமய அறநிலையத்துறை கோவில் நிலங்களுக்கு கிடையாது. எனவே ஒரு துளி நிலத்தை கூட ஆக்கிரமிக்க அனுமதிக்க மாட்டோம். கோவில் நில பிரச்னைக்கு தீர்வு கண்டு தருகிறோம் என்று கூறுபவர்களை நம்ப வேண்டாம். அவர்களிடம், எந்தவிதமான பணத்தையும் கொடுத்து ஏமாற வேண்டாம். அறநிலைய சட்டவிதிமுறைப்படி, கோவில் நிலங்களை ஆக்கிரமித்துள்ள ஏழை, எளியவர்களை வாடகைதாரர்களாக மாற்ற முடியும். மாவட்டத்தில், கோவில் நிலங்களை மீட்க உயர்நீதிமன்றத்தில் எந்தவிதமான தடையும் விதிக்கவில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement