dinamalar telegram
Advertisement

கரும்பு லாரியை குட்டியுடன் வழி மறித்த யானை

Share
புன்செய்புளியம்பட்டி: தமிழக - கர்நாடகா எல்லையில், கரும்பு லாரியை குட்டியுடன் யானை வழி மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான யானைகள் உள்ளன. அவ்வப்போது வனப்பகுதி வழியாக, சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையை யானைகள் கடந்து செல்வது வழக்கம். கடந்த சில நாட்களாக, சாலையில் செல்லும் கரும்பு லாரிகளை ஒரு யானை தன் குட்டியுடன் வழி மறிப்பதோடு, லாரியிலிருந்து கரும்பு துண்டுகளை பறித்து தின்றபடி அட்டகாசம் செய்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலை கர்நாடக மாநிலத்தில் இருந்து, கரும்பு பாரம் ஏற்றிய லாரி சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு செல்வதற்காக, மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. காரப்பள்ளம் சோதனைச்சாவடி அருகே சென்றபோது, குட்டியுடன் சாலைக்கு வந்த யானை கரும்பு லாரியை வழி மறித்தது. அப்போது டிரைவர் லாரியை முன்னோக்கி நகர்த்த முயன்றபோது, லாரியை செல்லவிடாமல் யானை தடுத்து நிறுத்தியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. லாரியில் இருந்த கரும்பு கட்டுகளை, தும்பிக்கையால் பறித்து தின்று கொண்டிருந்த யானையை வனத்துறை ஊழியர்கள் விரட்ட முயன்றபோது, கரும்புகளை தும்பிக்கையால் தூக்கியபடி வனப்பகுதிக்குள் சென்றது. இதை தொடர்ந்து மற்ற வாகனங்கள் புறப்பட்டு சென்றன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement