dinamalar telegram
Advertisement

சீமான், துரைமுருகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி காங்., கட்சியினர் எஸ்.பி.,யிடம் புகார்

Share
ஈரோடு: 'நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அவரது கட்சியை சேர்ந்த துரைமுருகன் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, வலியுறுத்தி, காங்., வக்கீல் பிரிவு புகார் மனு வழங்கியுள்ளது.
தமிழக காங்., கமிட்டி வக்கீல் பிரிவு மாநில செயலாளர் ராஜேந்திரன், ஈரோடு எஸ்.பி., சசி மோகனிடம் அளித்த புகார் மனு: கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த துரைமுருகன் , ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னிலையில், பொது மேடையில் பயங்கரவாதத்தை தூண்டும் வகையில் பேசியிருப்பதை சமூக ஊடகங்களில் பார்த்து அதிர்ச்சி அடைந்தோம். அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும்,'மனித வெடிகுண்டு கொலைகள் தமிழகத்தில் நடக்கும்' என, பேசி உள்ளார். இந்திய கலாச்சாரத்துக்கு எதிராக, காங்., தலைவர்கள் மீது வெறுப்புணர்வை தூண்டும் வகையில், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தவும், அரசால் தடை செய்யப்பட்ட விடுதலை புலிகள் என்ற தீவிரவாத இயக்கத்துக்கு ஆதரவாக, வன்முறையை நியாயப்படுத்தி பேசி வருகிறார். சீமான், அவரது கட்சியினர் தமிழகத்தில் சுதந்திரமாக செயல்படுவது, தமிழகத்தின் எதிர்காலத்துக்கு நிச்சயம் ஆபத்தை ஏற்படுத்தும். எனவே சீமான் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து பொது அமைதியை காக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement