dinamalar telegram
Advertisement

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 24,500 கன அடியாக சரிவு

Share
ஒகேனக்கல்: ஒகேனக்கல் காவிரியாற்றில், நீர் வரத்து நேற்று மாலை வினாடிக்கு, 24 ஆயிரத்து, 500 கன அடியாக சரிந்தது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில், கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரத்தால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், அணைகளின் பாதுகாப்பு கருதி, கபினி மற்றும் கே.ஆர்.எஸ்., அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேலும், ஒகேனக்கல் நீர்பிடிப்பு பகுதியை ஒட்டிய பிலிகுண்டுலு, அஞ்செட்டி, கேரிட்டி, தேன்கனிக்கோட்டை, நாட்றாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மழை சற்று குறைந்துள்ளதால், ஒகேனக்கல்லில் நீர்வரத்து குறைந்துள்ளது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 25 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை, 5:00 மணிக்கு, 24 ஆயிரத்து, 500 கன அடியாக சரிந்தது. இருந்தாலும், 20 ஆயிரம் கன அடிக்கும் மேலுள்ள நீர்வரத்தால், ஒகேனக்கல்லில் உள்ள சினி பால்ஸ், மெயின் அருவி, ஐந்தருவி, ஐவர் பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் செந்நிறத்தில் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement