dinamalar telegram
Advertisement

குடும்ப தகராறில் குழந்தையை கொல்ல முயன்ற அரசு அலுவலர் தற்கொலை

Share
தர்மபுரி: தர்மபுரியில், குடும்ப தகராறில் மனமுடைந்த அரசு அலுவலரான கணவர், குழந்தையை கொல்ல முயன்று, பின் தற்கொலை செய்து கொண்டார்.
தர்மபுரி, பட்டாளம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் சித்தார்த்தன், 45; இவர், தர்மபுரி சமூக நலத்துறை அலுவலகத்தில் திட்ட அலுவலராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி வளர்மதி, 36, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்களது ஆண் குழந்தை ஆதித்யா, 3; கடந்த இரு மாதமாக வளர்மதியின் நடத்தையில் சந்தேகமுள்ளதாக, தன் தாய் பவளக்கொடியிடம் சித்தார்த்தன் கூறியுள்ளார். பின் கடந்த, 20 நாட்களுக்கு முன் தாயை, அரூரிலுள்ள தன் சகோதரி வீட்டில் விட்டு வந்துள்ளார். கடந்த, 12ல் தாயிடம் மொபைல் போனில் பேசிய சித்தார்த்தன், மனைவி வளர்மதி தகராறு செய்து வருவது குறித்து தெரிவித்துள்ளார். இந்நிலையில், மனைவியிடம் ஏற்பட்ட தகராறில் விரக்தியடைந்த சித்தார்த்தன், நேற்று முன்தினம் மாலை வீட்டில் குழந்தை ஆதித்யாவின் முகத்தில் தலையணையை அழுத்தி கொலை செய்ய முயன்றுள்ளார். அப்?போது மயக்கமடைந்த குழந்தையை, இறந்து விட்டதாக நினைத்த அவர், வீட்டில் தூக்கில் தொங்கியுள்ளார். தகவலின்படிபணியிலிருந்து வீட்டிற்கு வந்த வளர்மதி, இருவரையும் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளார். இதில், சித்தார்த்தன் இறந்த நிலையில், குழந்தை ஆதித்யாவுக்கு டாக்டர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர். வளர்மதி மீது நடவடிக்கை எடுக்க, சித்தார்த்தனின் தாய் பவளக்கொடி புகாரின்படி, தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement