dinamalar telegram
Advertisement

அடித்து விரட்டிய பெண்கள்; சாராய வியாபாரிகள் ஓட்டம்

Share
நாகப்பட்டினம்: நாகை அருகே கள்ளச்சாராய வியாபாரிகள் குறித்து, அனைத்து தரப்பினரிடமும் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லாததால், ஆவேசமடைந்த பெண்கள், சாராய வியாபாரிகளை அடித்து விரட்டினர்.


நாகை மாவட்டம், செம்பியன்மாதேவி அடுத்த மூங்கில்குடி கிராமத்தில், புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து கடத்தி வரப்பட்டு, கள்ளச்சராய விற்பனை ஜோராக நடந்து வருகிறது. நடவடிக்கை எடுக்கக் கோரி அப்பகுதி பெண்கள், வேளாங்கண்ணி போலீசாரிடம் தொடர்ந்து புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இரு தினங்களுக்கு முன், கலெக்டர் அருண்தம்புராஜிடம் புகார் அளித்தனர். கலெக்டரும், சாராய வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க எஸ்.பி., அலுவலகத்திற்கு உத்தரவிட்டார். போலீசார் தரப்பில் இருந்து எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால், நேற்று ஆவேசமடைந்த மூங்கில்குடி கிராம பெண்கள், அப்பகுதி மயானம் அருகே சாராய பாக்கெட்டுகள் விற்பனை செய்த கும்பலை அடித்து விரட்டினர். பெண்களின் திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த வியாபாரிகள், சாராய பாக்கெட்டுகளை அங்கேயே போட்டு, தப்பியோடினர். தொடர்ந்து, கிராம பெண்கள் சாராய பாக்கெட்டுகளை சாலையில் வீசி எறிந்து அழித்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement