dinamalar telegram
Advertisement

விவசாய தொழிலாளர் சங்க ஆர்ப்பாட்டம்

Share
கிருஷ்ணகிரி: பர்கூர், மல்லப்பாடியில், விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றி வரும் விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வட்ட துணை செயலாளர் செல்வம் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான், 100 நாள் வேலைப்பற்றி விமர்சித்ததை கண்டித்தும், பா.ஜ.,வுக்கு ஆதரவாக செயல்படுவதை கைவிடக்கோரியும், 100 நாள் வேலையை, 200 நாளாக உயர்த்தி வழங்கக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர். இதில், வட்டத்தலைவர் திருப்பதி, செயலாளர் குணசேகரன், சங்க மாநில குழு உறுப்பினர் கண்ணு உட்பட, 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement