dinamalar telegram
Advertisement

வேன் திருடியவர் கைது

Share
கிருஷ்ணகிரி: ஓசூர், தொட்டகிரியை சேர்ந்தவர் தியாகராஜ் ரெட்டி, 54, சொந்தமாக வேன் வைத்து ஓட்டி வருகிறார். இவர், தன் வீட்டு முன் பொலிரோ கேண்டர் வேனை நிறுத்திருந்தார். வேலை விஷயமாக வெளியூர் சென்றுவிட்டு கடந்த, 6ல் வீடு திரும்பினார். அப்போது, வீட்டு முன் நிறுத்தியிருந்த வேன் மாயமானது தெரிந்து, ஓசூர் ஹட்கோ போலீசில் புகார் அளித்தார். விசாரணையில், தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் கடயம்பட்டியில் வசிக்கும் அய்யனார், 28, வேனை திருடியது தெரியவந்தது. அவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement