dinamalar telegram
Advertisement

இளம்பெண் எரித்துக்கொலை

Share
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே, கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலை பேரண்டப்பள்ளி வனப்பகுதியில், கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் எரித்த நிலையில் கிடந்தது. அவ்வழியாக வாகனங்களில் சென்றவர்கள் அதை பார்த்து கொடுத்த தகவலின்படி, ஓசூர் ஹட்கோ போலீசார், பாதி எரிந்த நிலையில் கிடந்த பெண்ணின் சடலத்தை மீட்டனர். சம்பவ இடம் சென்ற ஏ.எஸ்.பி., அரவிந்த், பெண்ணுக்கு தீ வைத்த மர்ம நபர்கள், கர்நாடகா மாநிலத்தில் இருந்து வந்தவர்களா அல்லது வனப்பகுதியையொட்டிய கிராமத்தை சேர்ந்தவர்களா என விசாரணை மேற்கொண்டார். இறந்த பெண்ணுக்கு, 25 முதல், 30 வயது இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். ஓசூர் ஹட்கோ போலீசார் விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement