dinamalar telegram
Advertisement

பிடிக்காத திருமணம்: இளம்பெண் விபரீதம்

Share
கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அடுத்த தேவர்முக்குளத்தை சேர்ந்தவர் பழனிசாமி, 49; இவரது மகள் மஞ்சு, 22; இவருக்கு அதே பகுதியை சேர்ந்த அன்பு என்பவருடன் கடந்த ஒரு மாதத்துக்கு முன் திருமணம் செய்து வைத்தனர். திருமணத்தில் மஞ்சுவுக்கு விருப்பமில்லாமல் இருந்ததாகவும், அவரை கட்டாயப்படுத்தி பெற்றோர் சம்மதிக்க வைத்ததாகவும் தெரிகிறது. பிடிக்காத திருமணத்தால், விரக்தியடைந்த நிலையில் இருந்த மஞ்சு கடந்த, 12ல் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின்படி காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிந்தனர். கிருஷ்ணகிரி டி.எஸ்.பி., சரவணன் விசாரித்து வருகிறார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement