dinamalar telegram
Advertisement

பா.ம.க., துணை சேர்மன் உள்ளிட்ட 2 பேர் கைது

Share
பாப்பிரெட்டிப்பட்டி: கொலையாளிகளை மறைத்து வைத்த வழக்கில், கடத்தூர் ஊராட்சி ஒன்றிய துணை சேர்மன் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டம், கடத்தூர் அடுத்த முத்தனூரை சேர்ந்தவர் முனியப்பன், 27. இவர், கடந்த ஜன., 16ல் கடத்தூர் சென்று விட்டு தன் டி.வி.எஸ்., மொபட்டில் முத்தனூர் திரும்பினார். எதிரே மோதுவது போல் காரில் வந்தவர்களுக்கும், முனியப்பனுக்கும் தகராறு ஏற்பட்டது. அவர்கள் தாக்கியதால் வீட்டிற்கு சென்ற சிறிது நேரத்தில் முனியப்பன் உயிரிழந்தார். புகார்படி, கடத்தூர் போலீசார் நான்கு பேரை கைது செய்தனர். குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்கோடு அவர்களை மறைத்து வைத்திருந்த சிலரை, போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த கடத்தூர் ஒன்றிய, பா.ம.க., துணை சேர்மனான, வெங்கடதாரஹள்ளியை சேர்ந்த சக்திவேல், 47, முத்தனூரை சேர்ந்த மாரியப்பன், 34, ஆகியோரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement