dinamalar telegram
Advertisement

வாழை தோட்டத்தில் கவிழ்ந்த வாகனம்

Share
அரூர்: கர்நாடகாவில் இருந்து பெரியவெங்காயம் ஏற்றிய ஈச்சர் வாகனம் நேற்று முன்தினம் இரவு, வடலூர் புறப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சந்திரவரத்தை சேர்ந்த டிரைவர் சுரேஷ், 40, வாகனத்தை ஓட்டினார். அரூர்-மொரப்பூர் சாலையில், எட்டிப்பட்டி பாலம் அருகில், நேற்று அதிகாலை, 2:30 மணியளவில், கட்டுப்பாட்டை இழந்த வாகனம், 50 அடி பள்ளத்தில் வாழைத்தோட்டத்தில் கவிழ்ந்தது. இதில், படுகாயமடைந்த சுரேஷை அரூர் தீயணைப்புத் துறையினர் மீட்டு, அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அரூர் போலீசார் விசாரிக்கின்றனர். விபத்துக்குள்ளான வாகனத்திலிருந்து கீழே கொட்டிய வெங்காயத்தை சிலர் அள்ளிச்சென்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement