dinamalar telegram
Advertisement

சிலந்தி பயத்தை விரட்டும் செயலி!

Share
Tamil News
இன்று மொபைல் விளையாட்டுக்களில் கலக்கி வருகிறது 'மேம்படுத்தப்பட்ட மெய்மை' தொழில்நுட்பம் (ஆக்மென்டெட் ரியாலிட்டி). இதை உளவியல் மருத்துவர்களும் தங்கள் நோயாளிகளின் சிகிச்சைக்கு பயன்படத் துவங்கிஉள்ளனர்.

சுவிட்சர்லாந்திலுள்ள 'பேசெல்' பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இதற்கான சோதனைகளை செய்துள்ளனர். உலகில் 5 சதவீதம் பேருக்கு சிலந்தி என்றாலே பயம். இந்த பயத்தை 'அராச்னோபோபியா' என உளவியலாளர்கள் சொல்வர். இதைப் போக்க மேம்படுத்தப்பட்ட மெய்மை தொழில்நுட்பம் எப்படி உதவும்? 'போபிஸ்' (Phobys) என்ற செயலியை மொபைலில் இறக்கிக்கொண்டு, அதை சிலந்தி பயம் உள்ளவர் முடுக்கினால், அவரைச் சுற்றியுள்ள இடத்திலோ, அல்லது அவர் மீதே கூட சிலந்தி இருப்பதைப் போல மொபைலில் தெரியும்.

உதாரணமாக, அவர் தன் கைகளை மொபைல் கேமரா வழியே பார்த்தால், அவரது கை மீது, உயிருள்ள சிலந்தி ஓடுவது போல போபிஸ் செயலி காட்டும்.'பேசெல்' பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இந்த செயலியை, சிலந்தி பயம் உள்ள 66 பேரிடம் தந்து இருவாரங்களுக்கு பயன்படுத்தும்படி கோரினர். சில வார சோதனைகளுக்குப் பின், அதை பயன்படுத்தியோருக்கு சிலந்தி பயம் கணிசமாக குறைந்திருப்பது தெரியவந்தது இந்த வெற்றியை அடுத்து அந்த செயலி, ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு மொபைல் தளங்களில் கிடைக்கிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement