dinamalar telegram
Advertisement

இடிபாடுகளையே மீண்டும் கான்கிரீட்டாக்கலாம்!

Share
Tamil News
சிமென்ட் மணல் கலவை தான் கட்டடங்களுக்கு அடிப்படை. ஆனால், இரண்டுமே சுற்றுச்சூழல் கேட்டுக்கு வழிவகுப்பவை. இதற்கு மாற்று வழி ஒன்றை டோக்கியோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இடிக்கப்படும் கட்டிடங்களின் இடிபாடுகளை மீண்டும் அரைத்து கான்கிரீட்டாக ஆக்கி பயன்படுத்த முடியும் என்பதை அவர்கள் நிரூபித்துள்ளனர்.

அதுமட்டுமல்ல, அவர்களது மறுசுழற்சிக் கலவைக்குத் தேவையான கார்பன்டை ஆக்சைடை காற்று மாசிலிருந்தே எடுத்துக்கொள்ள முடியும் எனவும் அவர்கள் காட்டிஉள்ளனர். சிமென்ட் தயாரிக்கவும், அதை தொலைதுாரத்திற்கு எடுத்துச் செல்லவும் நிறைய மாசுபாடு ஏற்படுகிறது. உலக மாசுபாட்டில் சிமென்ட் மற்றும் இதற கட்டுமான மாசுகளின் பங்கு 7 சதவீதம். எனவே, டோக்கியோ விஞ்ஞானிகளின் மறுசுழற்சி முறைக்கு இப்போதே பாராட்டுக்கள் கிடைத்துள்ளன.

இருந்தாலும், கட்டட இடிபாட்டுத் துகள்களை மீண்டும் கான்கிரீட் கலவையாக, கட்டிகளாக மாற்றினால் அவற்றின் பலம், தாங்கும் சக்தி, அசல் சிமென்ட் கலவை அளவுக்கு இருக்காது. எனவே தான், அதை சிறிய வீடுகளுக்கு மட்டுமே இப்போதைக்கு பயன்படுத்தலாம். அப்படியே பார்த்தாலும், ஒரு ஆண்டுக்கு ஒரு நகரில் இடிக்கப்படும் ஆயிரக் கணக்கான கட்டடங்களின் இடிபாடுகளை குப்பையில் கொட்டாமல், நேரே சிறிய வீடுகள் கட்டும் திட்டங்களுக்கு பயன்படுத்தலாம் என்பதும் ஒரு நல்ல செய்தி தானே.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • SENTHIL NATHAN - DELHI,இந்தியா

    நன்று நன்று

Advertisement