dinamalar telegram
Advertisement

கண்டக்டரிடம் பணம் அபேஸ்: ஆத்துார் பெண்கள் இருவர் கைது

Share

புதுச்சேரி : பஸ்சுக்காக காத்திருந்த பி.ஆர்.டி.சி., பெண் கண்டக்டரிடம் ரூ.10,500 பணம் திருடிய ஆத்துார் பெண்கள் இருவர் சிறையில் அடைக்கப்பட்டனர்.


புதுச்சேரி, அரும்பார்த்தபுரம் குமரன் வீதியை சேர்ந்தவர் பாண்டியன் மனைவி வேல்விழி, 47; பி.ஆர்.டி.சி., கண்டக்டர். கடந்த 9ம் தேதி வேல்விழி நெல்லித்தோப்பு சிக்னலில் பஸ்சுக்காக காத்திருந்தார். விழுப்புரம் பஸ் வந்து நின்றதும், இரு பெண்கள் வேல்விழியை உரசியவாறு பஸ்சில் ஏறினர். சிறிது நேரம் கழித்து வேல்விழி தனது பையை சரிபார்த்த போது 10,500 ரூபாய் வைத்திருத்த மணிபர்ஸ் மாயமாகி இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். உருளையன்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

நேற்று முன்தினம் புது பஸ் நிலையத்தில் கை குழந்தைகளுடன் நின்றிருந்த இரண்டு பெண்களிடம் சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, பணத்தை பறிகொடுத்த வேல்விழியை வரவழைத்தனர். அவர் தன்னிடம் மணிபர்சை திருடியது அவர்கள் தான் என அடையாளம் காட்டினார்.விசாரணையில் அவர்கள், சேலம் மாவட்டம் ஆத்துாரை சேர்ந்த செல்வசுந்தரி,36, ஆர்த்தி, 36, என தெரிய வந்தது. இருவர் மீதும் நகை திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது.

மேலும், உருளையன்பேட்டையில் ஒரு பெண்ணிடம் 18 சவரன், ரெட்டியார்பாளையம் பகுதியில் 5 சவரன் நகை திருடியதை ஒப்புக் கொண்டனர்.இருவரையும் கைது செய்து, பணத்தை பறிமுதல் செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement