கரடி வேடத்தில் வந்து நகைகள் கொள்ளை
துாத்துக்குடி : கோவில்பட்டியில் கரடி வேடமணிந்து வந்து பத்து பவுன் நகையை கொள்ளையடித்துச்சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஆவுடையம்மாள்புரத்தை சேர்ந்தவர் பார்வதியம்மாள் 55. நேற்று முன்தினம் இரவில் வீட்டில் துாங்கிக்கொண்டிருந்தார். அப்போது தசரா விழாவிற்கு கரடி வேடம் அணிந்தவர்களைப்போல வந்த இரண்டுபேர் தன்னை கட்டிப்போட்டுவிட்டு பீரோவில் இருந்த 6 பவுன் நகையை கொள்ளையடித்துச்சென்றுவிட்டதாக புகார் தெரிவித்தார். நாலாட்டின்புதுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
திருநெல்வேலிமாவட்டம் கல்லிடைகுறிச்சி மடவிளாகத்தை சேர்ந்தவர் இசக்கிமுத்து 50. மகளின் திருமணத்திற்காக பீரோவில் வைத்திருந்த 30 பவுன் நகை திருடுபோனது. கல்லிடைகுறிச்சி போலீசார் விசாரித்தனர்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!