dinamalar telegram
Advertisement

மத்திய தர வர்க்கத்தினரிடம் பொருட்களை வாங்க பணம் இருக்கிறது: மத்திய நிதியமைச்சர்

Share
புதுடில்லி: இந்தியா சிறந்த வாங்கும் திறன் கொண்ட நாடாக இருக்கிறது. மேலும், இந்தியாவின் மத்திய தர வர்க்கத்தினரிடம் பொருட்களை வாங்குவதற்கான பணம் இருக்கிறது என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா, நடப்பு ஆண்டில் இரட்டை இலக்க வளர்ச்சியை நெருங்கும் என்றும்; இந்தியா தான் உலகிலேயே அதிக வளர்ச்சி கொண்ட நாடாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். அமெரிக்கா சென்றிருக்கும் நிர்மலா சீதாராமன், அங்கு 'மொசாவர் - ரஹ்மானி' மையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில், ஹார்வர்டு பல்கலை பேராசிரியர் லாரன்ஸ் சம்மர்ஸ் உடனான உரையாடலின் போது இவ்வாறு கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது: அடுத்த ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5 - 8.5 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம். இது அடுத்த ௧௦ ஆண்டுகளுக்கு நீடிக்கும்.
நடப்பு ஆண்டில் இரட்டை இலக்கத்துக்கு நெருக்கமான வளர்ச்சியை அடையும். நிதியமைச்சகம், வளர்ச்சி குறித்த எந்த கணிப்பையும் இதுவரை மேற்கொள்ளவில்லை. என்றாலும், உலக வங்கி, பன்னாட்டு நிதியம் மற்றும் மதிப்பீட்டு அமைப்புகள் அனைத்தும், நான் குறிப்பிட்ட இந்த வளர்ச்சி வீதத்தை தான் தெரிவிக்கின்றன.

சிறந்த வாங்கும் திறன் கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. நாட்டின் மத்திய தர வர்க்கத்தினரிடம் பொருட்களை வாங்குவதற்கான பணம் இருக்கிறது. பிற இடங்களிலிருந்து வரும் மக்களுக்கு இந்தியாவில் முதலீடு செய்வதற்கும், உற்பத்தி செய்வதற்கும் ஏற்ற சந்தை இருக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (56)

  • theruvasagan -

    நேர்மையாக உழைத்து ரிட்டயராகி சேமித்த பணத்ததை வங்கியில் முதலீடு செய்து அதில் வரும் வட்டியை வைத்து வாழும் மூத்தகுடி மக்கள் அநியாய வட்டி குறைப்பால் வருமானம் பாதியாய் குறைந்து கடைசி காலத்தில் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டதும் இந்த அரசின் சாதனை. அவர்களுக்கு இதுவரை கிடைத்து வந்த ரயில் பயண சலுகையை ஒழித்துக் கட்டியதும் மற்றொரு சாதனை.

  • முருகன் -

    அதனால் தான் எரி பொருள் விலையை தினமும் ஏற்றிக் கொண்டு இருக்கிறார்கள். இதனால் அனைத்து பொருட்களும் விலை பல மடங்கு ஏறி விட்டது. மக்கள் சரியான படம் புகட்டுவார்கள்.

  • Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்

    ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளே செலவை ஊக்குவித்து மக்களை ஊதாரிகளாக மாற்றும் பொருளாதாரம் , உலக பொருளாதாரம் ?.

  • P.K.SELVARAJ - Chennai,இந்தியா

    இது போன்று பேச பிஜேபி யால் மட்டுமே முடியும். 1991 முதல் நரசிம்ம ராவ் அரசு கொண்டு வந்த சீர்திருத்த நடவடிக்கையால் இந்தியா வேகமாக முன்னேற ஆரம்பித்தது. காங்கிரஸ் ஆட்சியில் பெட்ரோல் disel gas விலை உயர்ந்த போது ஏன் போராட்டம் நடத்தியது. நாங்கள் வந்தால் விலை குறைப்போம் என ஏன் கூறியது?

  • sankaseshan - mumbai,இந்தியா

    டாஸ்மாக்கில் செலவு பண்ணும் அளவுகு பண புழக்கம் உள்ளது நிதி அமைச்சர் சொன்ன தில் தவறில்லை . எவ்வளவு டிக்கெட் விலை இருந்தாலும் சினிமாவை விடமாட்டார்கள் வாரஇறுதி நாட்களில் ஹோட்டலில் கும்மாளம் அடிப்பார்கள் இவற்றுக்கு செலவழிக்க பணம் இருக்கிறது

Advertisement