dinamalar telegram
Advertisement

விஜய் ரசிகர்கள் 110 பேர் வெற்றி; கமல் கட்சியிலும் 2 பேர் வெற்றி

Share
சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த 169 பேரில், 110 பேர் வெற்றி பெற்றதை, விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

விஜய் மக்கள் இயக்கத்தின் வாயிலாக, பல நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து செய்யப்பட்டு வந்தன. ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவித்த போது, விஜய் ரசிகர்கள் 169 பேர் களத்தில் இறங்கினர். 'தேர்தல் பிரசாரத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ, விஜய் பெயர் மற்றும் படத்தையோ பயன்படுத்தக் கூடாது' என அறிவுறுத்தப்பட்டிருந்தது. போட்டியிட்ட 169 பேரில், 110 பேர் வெற்றி பெற்றதாக, மக்கள் இயக்க நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.

'விஜயகாந்த் பாணியில் சினிமாவுக்கு வந்த விஜய், தற்போது அவரைப் போலவே, அரசியலிலும் வெற்றித் தடத்தை ஆரம்பித்துள்ளார்' என்றும், 'ஊரக உள்ளாட்சி தேர்தலில் மூன்றாவது பெரிய கட்சியாக விஜய் மக்கள் இயக்கம் உருவெடுத்துள்ளது' என்றும், விஜய் ரசிகர்கள் கூறுகின்றனர்.

ம.நீ.மய்யத்தில் 2 பேர் வெற்றிஊரக உள்ளாட்சி தேர்தலில், இருவர் மட்டுமே வெற்றி பெற்று மக்கள் நீதி மய்யத்தின் மானத்தை காப்பாற்றி உள்ளனர்.
ஊரக உள்ளாட்சி தேர்தலில், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., உட்பட அனைத்து கட்சிகளும் தோல்வியை சந்தித்துள்ளன. அதில், கமலின் மக்கம் நீதி மய்யம் கட்சியும் அடங்கும். ஆனாலும், அக்கட்சியின் கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை நகரச் செயலர் குமார்; தென்காசி மாவட்டம், குவளைக்கன்னி பஞ்சாயத்து, சிவலிங்கபுரம் கிராமம், முதலாவது வார்டில் வெற்றி பெற்றுள்ளார். காஞ்சி தென்கிழக்கு மாவட்டம், பழவேலி கிராம ஊராட்சி, நான்காவது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட அனிதா பாபுவும் வெற்றி பெற்றுள்ளார்.

தேர்தல் குறித்து மக்கள் நீதி மய்யம் செய்தி தொடர்பாளர் முரளி அப்பாஸ், 'டுவிட்டர்' பதிவில், 'நடந்தது ஒரு தேர்தல்; இதற்கோர் ஓட்டு எண்ணிக்கை; வெற்றி பட்டியல். பேசாமல், ஆள்பவர்களே ஆட்களை நியமித்துவிட்டு போயிருக்கலாம்; அரசு பணம் மிச்சம்' என கூறியுள்ளார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (34)

 • Vena Suna - Coimbatore,இந்தியா

  வேற ஒன்னும் இல்லை. பாதிரியாரை கைது பண்ணதால திமுகக்கு வாக்கு அளிக்காம இவனுக்கு போட்டாங்க.. சும்மா லேசா trailer.

 • DVRR - Kolkata,இந்தியா

  விஜய் மக்கள் இயக்கத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்று அப்பா மகன் சண்டை வழியில் வந்ததே அந்த இயக்கம் இது இல்லை இது வேறு கிறித்துவ விஜய் மக்கள் இயக்கமா???கிறித்துவ விஜய் மக்கள் இயக்கம் என்றால் பரவாயில்லை கிறித்துவர்களின் பிச்சையினால் தானே மடியில் அரசு ஆட்சிக்கு வந்தது???

 • Muthuraj Richard - Coimbatore,இந்தியா

  அடுத்த ரஜினிகாந்த்......நாடும் இளைஞர்களும் உருப்பட்ட மாதிரி தான்.......படம் ஓட்ட இவர்கள் கையெடுக்கும் யுக்திக்கு பலிக்கடாவான பழைய ரசிகர்கள் இன்றும் குமுறுகிறார்கள்... நடிகனுக்கு ஜே போடும் நிலை மாறி, நல்ல கல்வி தகுதி, அரசியல் அறிவு மற்றும் தேர்ந்த அனுபவம் உள்ளவர்களை தேர்ந்தெடுக்க மக்கள் முன்வரும் வரை நம் மாநில அரசியல் ஆரோகியமாக இருக்காது. வாழ்க தமிழகம்

 • Vena Suna - Coimbatore,இந்தியா

  அப்போ அடுத்த முதல்வர் விஜய் தான். உதயநிதி கனவு கலைந்தது. கமல் கட்சியை மூடலாம்.

  • Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா

   எப்படியோ பிஜேபிக்கு வாய்பில்லை என்பதை ஒப்பு கொண்டிருகளே....

  • Thirumurugan - Kuala Lumpur,மலேஷியா

   ஒரே ஒரு ஒட்டு பெற்ற பிஜேபி தலைவர்கள் இருக்கும் போது ஏன் தமிழகத்தை ஆள முடியாது?

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  MGR அண்ட் ஜெயா என்ற இரு அரிதரம் தமிழகத்தை பிரிச்சி மேஞ்சிவிட்டார்கள் . நல்லவேளை பிஜேபி உடன் கூட்டால் AIADMK கரைந்து காணாமல் , போகாமல் நடிகர்கள் மூலம் வேறு ரூபத்தில் வெளிப்படுகிறது . முழையில் பிடிங்கப்படடாவிட்டால் விஷ செடி துளிர்த்து தமிழகம் மீண்டும் மோடியின் வடநாடு போல குஜராத்து போல சீரழியும் .

  • Vittalanand - ,

   மோடியின் குஜராத் மிக்க வளம் பெற்றே உள்ளது. நீ தான் டாஸ்மாக்குலேயும் பிரியாணி போட்டலத்ட்ஜில்வ்யும் சீரழிந்து போய் இருக்கிறாய்

  • ramesh - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

   ஆமாய்யா குஜராத் வளம் பெற்றதா தான் டிரம்ப் வரும்போது பார்த்தோமே

Advertisement