dinamalar telegram
Advertisement

மகளை ஒப்படைக்க 5 லட்சம் லஞ்சம் கேட்ட போலீசார்; கேரள உயர் நீதிமன்றம் கண்டனம்

Share
கொச்சி : கேரளாவில், வீட்டைவிட்டு வெளியேறி டில்லி சென்ற பெண்ணை அவரது பெற்றோரிடம் ஒப்படைக்க, கொச்சி போலீசார் 5 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்ட விவகாரத்திற்கு, கேரள உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

காதல்
கேரளா மாநிலம் கொச்சியில், டில்லியைச் சேர்ந்த தம்பதி 11 ஆண்டுகளுக்கு முன் குடியேறினர். இவர்களுக்கு ஐந்து பிள்ளைகள் உள்ளனர்.தம்பதியின் மூத்த மகள், சமூக வலைதளம் வாயிலாக காதல் வலையில் சிக்கினார்.

இதையடுத்து, வீட்டில் இருந்த 35 ஆயிரம் ரூபாய் பணத்துடன், தன் இளைய சகோதரியை அழைத்துக் கொண்டு டில்லி சென்றார். மகளை காணாமல் தேடிய பெற்றோர், கொச்சி வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பெண்ணின், 'மொபைல் போன் சிக்னலை' வைத்து அவர் டில்லியில் உள்ளதை அறிந்த போலீசார், சுபைர் என்ற இளைஞருடன் தங்கி இருந்த மகள்களை மீட்டு கொச்சி அழைத்து வந்தனர். சுபைரும் கைது செய்யப்பட்டு கொச்சி அழைத்து வரப்பட்டார்.

இந்நிலையில், 'மகள்களை பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டுமென்றால் 5 லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும்' என, போலீசார் கூறியதாக, கேரள நாளிதழ்களில் செய்தி வெளியானது.மேலும், பணம் தர தம்பதி மறுத்ததை அடுத்து அவர்களது மூத்த மகனை கைது செய்ததுடன், எட்டாம் வகுப்பு படிக்கும் இளைய மகனை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்றதாக அந்த நாளிதழில் செய்தி வெளியானது.
இதன் அடிப்படையில், இந்த விவகாரத்தை கேரள உயர் நீதிமன்றம் தானே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. நீதிபதி தேவன் ராமச்சந்திரன் நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:நாளிதழில் வெளியாகியுள்ள செய்தி உண்மை எனில், இந்த விவகாரத்தை உடனடியாக கவனத்தில் கொள்ள வேண்டும்.

அறிக்கை
இது மிகவும் ஆபத்தான விளையாட்டு. நாளிதழில் வெளியாகியுள்ள செய்தியின் அடிப்படையில் இந்த வழக்கை பதிவு செய்து, தலைமை நீதிபதியின் வழிகாட்டுதலுடன் விரைவாக முடிக்க வேண்டும்.இந்த விவகாரம் தொடர்பான முழு விபரங்களை, கொச்சி கமிஷனர் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட தம்பதி போலீசாரின் துன்புறுத்தலுக்கு ஆளாகாமல் இருப்பதை கமிஷனர் உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தர விட்டார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (15)

 • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

  நூறுசதவீதம் போய்விட்ட லிட்டரசி இப்போ பல்லை இழிகுத்துது

 • N.Purushothaman - Cuddalore,மலேஷியா

  நல்ல வேளையாக நோக்கு கூலி கேக்கலையேன்னு சந்தோஷப்படணும் ... தமிழ்நாட்டு RSB மீடியாவுல இதை பத்தின செய்தி வாராமல் சமூக நீதியை காப்பாத்தியிருப்பானுங்க .....

 • அப்புசாமி -

  இந்த கேடு கெட்ட போலீசுக்கு லஞ்சம் தருவதை விட, அந்தப் பொண்ணை தலை முழுகிடலாம்.

 • raja - Cotonou,பெனின்

  நம்ப மையத்துக்கு கோபம் வருமே இந்த செய்தியை படித்தால்...

 • duruvasar - indraprastham,இந்தியா

  சிக்கிமில் ஒரு கிராம சாக்கடை அடைப்புக்கு மோடி பொறுப்பேற்க சொன்ன விந்தையப்பன் ரொம்பா விவரமாக பகுத்தறிவின் உச்சத்தை தொட்டு கருத்து போட்டிருக்கிறார். வரவேற்போம்.

Advertisement