dinamalar telegram
Advertisement

காஷ்மீர் பயங்கரவாத சம்பவங்களைத் தடுக்க புது திட்டம்!

Share
புதுடில்லி : ஜம்மு - காஷ்மீரில் கடந்த சில நாட்களாக நடந்து வரும் பயங்கரவாத செயல்களை ஒடுக்கும் வகையில், பல அமைப்புகள் இணைந்து தேசிய அளவில் செயல்படும் புதிய திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது.

ஜம்மு - காஷ்மீரில் கடந்த சில நாட்களாக வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக குறிப்பிட்ட சிலரைத் தேர்ந்தெடுத்து அவர்களை கொலை செய்யும் நடவடிக்கைகளில் பயங்கரவாதிகள் ஈடுபட்டுள்ளனர். இதை ஒடுக்க மத்திய அரசு புதிய திட்டத்தை வகுத்துள்ளது.

இது குறித்து பாதுகாப்புப் படையினர் கூறியுள்ளதாவது: ஜம்மு - காஷ்மீர் விவகாரம் தொடர்பாக, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா சமீபத்தில் ஆய்வு செய்தார். பல்வேறு புலனாய்வு அமைப்பின் தலைவர்கள் இதில் பங்கேற்றனர். அந்தக் கூட்டத்தில் புதிய யுக்தி வகுக்கப்பட்டுள்ளது. காஷ்மீரை அடிப்படையாக வைத்து, நாடு முழுவதும் பயங்கரவாதிகள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு, அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், 28 மத்திய புலனாய்வு அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்படும். தற்போது முதல் கட்டமாக, காஷ்மீரைத் தவிர, டில்லி, பஞ்சாப், உத்தர பிரதேசத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, இந்த அமைப்புகள், அந்தந்த மாநிலப் போலீசாருடன் இணைந்து, உளவுத் தகவல்களை பகிர்ந்து கொள்ளும். அதனடிப்படையில் பயங்கரவாதிகள் அடையாளம் காணப்பட்டு, கைது செய்யப்படுகின்றனர். அடுத்த சில மாதங்களுக்கு இந்த நடவடிக்கை தொடரும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

பயங்கரவாதி சுட்டுக் கொலைஜம்மு - காஷ்மீரின் அவந்திபுரா பகுதியில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நேற்று துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில், ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த முக்கிய பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (12)

 • sankaseshan - mumbai,இந்தியா

  முதலுலில் சூரியை என்சௌண்டேர் பண்ணனும்

  • Suri - Chennai,இந்தியா

   அண்ணனுக்கு பத்து டஜன் ஜெலுசில் பார்சல். மாநில தேர்தல் வருது இல்லையா.. இனி இப்படிப்பட்ட செய்திகளை அதிகம் பார்க்கலாம்.

 • Soumya - Trichy,இந்தியா

  முட்டிக்கு முட்டி தட்டினால் மூர்க்க பயங்கரவாதிங்க மாட்டுவானுங்க

 • R. SUKUMAR CHEZHIAN - chennai,இந்தியா

  தமிழகத்திலும் கேரளத்திலும் கூட தீவிர கவனம் செலுத்துவதற்கு மத்திய பாதுகாப்பு பிரிவு திட்டம் தீட்டி வேண்டும், இங்கு பிரிவினைவாதிகள், சமூக விரோதிகள், தேச விரோதிகள், மதமாற்ற கும்பல்கள், லவ் ஜிகாத் கூட்டங்கள், நக்சல்பாரிகள் சந்தடி இல்லாமலும் சில இடங்களில் வெளிபடையாகவும் நமது தேசதுக்கு பண்பாடிற்கும் எதிராக செயல் படுகிறார்கள். மக்கள் பாதுகாப்பு மற்றும் அமைதியை கருத்தில் கொண்டு மத்திய அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும். வந்தேமாதரம்.

 • raja - Cotonou,பெனின்

  தீவிரவாதின்னு தெரிஞ்சாவே போட்டு தள்ளிடுங்க...விசாரணை எல்லாம் தேவையே இல்லை... அதுவேற தெண்ட செலவு....

 • GANESUN - Delhi,இந்தியா

  70 வருஷமா இந்தியர்களின் ரத்தத்தை அட்டை பூச்சி போல் உறிஞ்சி சகல வசதிகளையும் அடைந்து சொர்க்கத்தின் சுகங்களை அனுபவித்து வந்த சொந்த பெயரை மறைத்து வாழ்ந்தவர்களுக்கு குழாயை அடைக்க ஆரம்பித்தவுடன் பயித்தியம் பிடிக்கத் தான் செய்யும்.

Advertisement