dinamalar telegram
Advertisement

உ.பி., சிறுமி பாலியல் பலாத்காரம்; தந்தை உட்பட 28 பேர் மீது வழக்கு

Share
லக்னோ : உத்தர பிரதேசத்தை சேர்ந்த 17 வயது சிறுமியை அவரது தந்தை மற்றும் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் உட்பட 28 பேர், பல ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


உ.பி., மாநிலம் லலித்பூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமி போலீசில் புகார் அளித்தார். அதன் விபரம்: என் தந்தை லாரி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.நான் 6ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது, 'டிவி'யில் ஆபாச படங்களை போட்டுக் காட்டி என்னிடம் தவறாக நடக்க முயன்றார்.


அதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்ததும் என்னை வெளியே அழைத்து சென்று புது ஆடைகள் வாங்கி கொடுத்து, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.இது பற்றி வெளியே சொன்னால், என் தாயை கொன்றுவிடுவேன் என்று மிரட்டினார்.


இந்த சம்பவத்துக்கு பின், என்னை அடிக்கடி வெளியே அழைத்து செல்வார். ஓட்டலில் அறை எடுத்து தங்க வைப்பார். உணவில் மயக்க மருந்து கலந்து கொடுப்பார். அதை சாப்பிட்டதும் அரை மயக்கத்தில் இருப்பேன்.அப்போது யார் யாரோ வந்து என்னை பலாத்காரம் செய்வர்; வயிற்று வலியில் துடிப்பேன்.


சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த மாவட்ட தலைவர் திலக் யாதவ், அக்கட்சியின் நகர தலைவர் ராஜேஷ் ஜெயின் ஜோஜியா, பகுஜன் சமாஜ் மாவட்ட தலைவர் தீபக் ஆஹிர்வார் உட்பட 28 பேர் என்னை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.பல ஆண்டுகளாக இந்த கொடுமையை அனுபவித்து வருகிறேன். இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.


இதையடுத்து, சிறுமியின் தந்தை, அரசியல் கட்சி பிரமுகர்கள் உட்பட 28 பேர் மீது, 'போக்சோ' சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (7)

 • திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் - Chennai,பிரான்ஸ்

  UP ல எலெக்ஷன்னா என்னெல்லாம் வருது பாத்தீங்களா அப்பாவி பொண்ணுங்களை வச்சுதான் முடிச்சு போடறாங்க அவங்களுக்கு மாத்தி யோசிக்கவே முடியாதுன்னு சொன்னா கேளுங்க புத்தியெல்லாம் ஒரு சிறிய வட்டத்துள்ளேயேதான் ஒரு பாஜக MLA கேச டில்லிக்கு மாத்தின கதை என்னாச்சு?

 • Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா

  இதில் யாரும் பிஜேபியின் பேர் அடிபடாததால், விரைவில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கலாம்

 • raja - Cotonou,பெனின்

  இதப்பத்தி, நம்ப மெழுகுவர்த்தி விளக்கேந்தி வெளிச்சம் கொடுத்த போலிகாந்திகள்...நம்ப பெரியார் சிஷ்யைகள், அவங்க பின்னாடி திரியும் ஆஹா ஓஹோன்னு கோஷம்போடும் உடன்பிறப்புக்கள் என்ன சொல்ல போறாங்களோன்னு பயத்தொடு இருக்கிறேன்....

 • தமிழ் குடிமகன் -

  கேடு கெட்ட ஜென்மங்கள் !!! அதை அறுக்கும் சட்டத்தை இயற்றி தண்டனை விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும் !!!

 • Sathyanarayanan Sathyasekaren -

  PLEASE DON'T REPEAT THE SAME COMMENT

Advertisement