dinamalar telegram
Advertisement

தூத்துக்குடியில் ரவுடி சுட்டுக்கொலை; இன்றைய கிரைம் ரவுண்ட் அப்

Share

இந்திய நிகழ்வுகள்:காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரர்கள் 2 பேர் வீர மரணம் அடைந்தனர்.

அச்சத்தில் குற்றவாளி தற்கொலைஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் மாவட்டம் கோட்புட்லி நகருக்குள், தலைமறைவான குற்றவாளிகள் சிலர் நுழைய இருப்பதாக, நேற்று முன்தினம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சோதனைகளைத் தீவிரப்படுத்திய போலீசார், அவர்களின் வாகனத்தை மறித்தனர். குற்றவாளிகள் தப்பி ஓடியதால் போலீசார் விரட்டிச் சென்றனர். போலீசாரிடம் சிக்கி விடுவோம் என்ற அச்சத்தில், கொலை வழக்கில் தலைமறைவான சுகா என்ற ரூப்சந்த் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மாமனார், மைத்துனர் கொலைதிருவனந்தபுரம்: கேரளாவின் திருவனந்தபுரம் பூஜப்புரா பகுதியைச் சேர்ந்தவர் அருண், 31. இவர் அதிகமாக மது அருந்தியதால், ஆத்திரம் அடைந்த மனைவி தன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். மனைவியை திரும்ப அழைத்து வர, நேற்று முன்தினம் போதையில் சென்ற அருண், மைத்துனர் அகில், 24, மாமனார் சுனில், 48, ஆகியோருடன் தகராறு செய்துள்ளார். அவரை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த அருண், மாமனார், மைத்துனரை கத்தியால் குத்திக் கொன்றார். தகவல் அறிந்த போலீசார், அருணை கைது செய்தனர்.

பயங்கரவாதிகளின் ஆதரவாளர்கள் கைதுஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் உட்பட பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு செயல்படும் பயங்கரவாதிகளை, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு பிரிவினர் தீவிரமாக தேடுகின்றனர். இதன்படி காஷ்மீரின் புல்வாமா, ஷோபியான், ஸ்ரீநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.அப்போது, பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்பட்ட வசீம் அஹ்மத் சோபி, தாரிக் அஹ்மத் தார், பிலால் அஹ்மத் மிர் மற்றும் தாரிக் அஹ்மத் பாபண்டா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

சிறுவனுக்கு பாலியல் கொடுமைபரேலி: உத்தர பிரதேசத்தின் மவுலானா மாவட்டம் கோட் பகுதியில் 9 வயது முஸ்லிம் சிறுவன், அதே பகுதியைச் சேர்ந்த 21 வயது மவுலானாவிடம் மதக் கல்வி பயின்று வந்தார். சமீபத்தில் சிறுவனிடம் முறைகேடாக பாலியல் வன்கொடுமை செய்த மவுலானா, அது குறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இதையடுத்து, பெற்றோர் கொடுத்த புகாரின்படி போலீசார் வழக்கு பதிவு செய்து மவுலானாவை கைது செய்தனர்.

வேவு பார்த்த பாக்., பயங்கரவாதிபுதுடில்லி:சமீபத்தில் கைது செய்யப்பட்ட பாக்., பயங்கரவாதி, டில்லியின் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்துவதற்காக வேவு பார்த்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பல இடங்களை உளவு பார்த்து, பாக்.,கில் உள்ளவர்களுக்கு தகவல்கள் பகிர்ந்து வந்துள்ளார். டில்லியில் உள்ள செங்கோட்டை, இந்தியா கேட், போலீஸ் தலைமையகம் உள்ளிட்ட இடங்களைக் கண்காணித்து வந்ததாக விசாரணையில் கூறியுள்ளார்.

தமிழக நிகழ்வுகள்தூத்துக்குடியில் பிரபல ரவு என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். 18 குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் துரைமுருகன் . இவரை முள்ளக்காடு அருகே சுற்றி வளைத்த போலீசார் சுட்டுக்கொன்றனர்.

குளிர்பானம் குடித்த தாய், மகள் இறப்புதுாத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் இளங்கோவன் 37. மனைவி கற்பகம் 34. மகள் தர்ஷினி 7. சண்முகபாண்டி 8, மகன் உள்ளனர். நேற்றுமுன்தினம் இரவில் தாயும், மகளும் ஓட்டலில் அசைவ உணவு வாங்கி சாப்பிட்டுள்ளனர். பின்னர் குளிர்பானம் அருந்தியுள்ளனர். சற்றுநேரத்தில் வாந்தி மயக்கத்துடன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தனர். கோவில்பட்டி கிழக்கு போலீசார் விசாரித்தனர். உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மாரியப்பன், ஜோதிபாஸ் ஆகியோர், உணவு வாங்கிய ஓட்டல், குளிர்பானம் வாங்கிய கடையில் ஆய்வுசெய்தனர். அவர்கள் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.

கூடலுாரில் மீண்டும் புலிகூடலுார்: கூடலுாரில் மீண்டும் புலி தென்பட்டதால், பீதியடைந்துள்ள மக்கள் வீடுகளில் முடங்கினர்.

நீலகிரி மாவட்டம், கூடலுார், மசினகுடியில் நான்கு பேரை தாக்கி கொன்ற புலியை, மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில், செப்., 25 முதல் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். ஏழு நாட்கள் தென்படாத புலி, , கூடலுார் ஒம்பட்டாவில், தானியங்கி கேமராவில் பதிவாகி இருப்பது தெரிந்தது. இதையடுத்து, முதுமலை மற்றும் போஸ்பாரா, கோழிகண்டி, ஓடகொல்லி, குன்றுதாள்வயல் பகுதியில் தேடுதல் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மயக்க ஊசி செலுத்தி பிடிக்க கால்நடை மருத்துவர்கள், ஐந்து குழுக்களாக பிரிந்து தேடி வருகின்றனர்.ஏற்கனவே, புலி வந்து சென்ற தேவர்சோலை தனியார் எஸ்டேட் பகுதிகளிலும், வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.தனியார் எஸ்டேட் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நேற்று பணிக்கு செல்லாமல் வீடுகளில் முடங்கினர்.

ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் ரூ.3.26 லட்சம் 'அபேஸ்'தஞ்சாவூர்: ஓய்வு பெற்ற ஆசிரியரிடம், வங்கி அலுவலர் போல போனில் பேசி, 3.26 லட்சம் ரூபாயை மோசடி செய்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர், அன்னை இந்திரா நகரைச் சேர்ந்தவர் மருதையன், 82. ஓய்வு பெற்ற ஆசிரியரான இவரது மொபைல் போனில் பேசிய மர்ம நபர், பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் பேசுவதாகவும், மூத்த குடிமக்களுக்கான புதிய ஏ.டி.எம்., கார்டு வந்துள்ளதாகவும், பழைய ஏ.டி.எம்., கார்டில் உள்ள விபரங்களை தெரிவிக்குமாறும் கூறி உள்ளார். இதை நம்பிய மருதையன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஏ.டி.எம்., கார்டு விபரங்களையும், மொபைலில் அவருக்கு வந்த ஓ.டி.பி., எண்ணையும் கூறியுள்ளார். உடனே மர்ம நபர், இணைப்பை துண்டித்து விட்டார். அதன்பின், மருதையன் வங்கிக் கணக்கில் இருந்து 3.26 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டதாக எஸ்.எம்.எஸ்., வந்துள்ளது. மருதையன் புகாரின்படி, தஞ்சாவூர் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சினிமா ஆசை காட்டி மோசடி; 'டுபாக்கூர்' இயக்குனர் கைதுராமேஸ்வரம்: சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை காட்டி, ராமேஸ்வரத்தில் பெண்களிடம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் இமானுவேல்ராஜா, 43. முகநுாலில் தன் பெயர் சிவசக்தி, சினிமா இயக்குனர் என போலியாக பதிவேற்றம் செய்து, பல பெண்களிடம் நடிக்க வைப்பதாகக் கூறி, 'தொடர்பு' வைத்துக் கொண்டார். அதை 'வீடியோ' எடுத்து மிரட்டி, அப்பெண்களிடம் பணம் பறித்து சொகுசாக வாழ்ந்தார். இவர், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் சில பெண்களிடம் இதுபோல மோசடியில் ஈடுபட்டதாக புகார்கள் வந்தன. இதன்படி, அவரை ராமேஸ்வரம் போலீசார் கைது செய்தனர்.

துாத்துக்குடி, சென்னையில் பல திருட்டு, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட இமானுவேல் ராஜாவை துாத்துக்குடி போலீசார் குண்டாசில் சிறையில் அடைத்தனர். ஜாமினில் வந்தவர், பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி மோசடி செய்து மன்மதனாக வாழ்ந்துள்ளார். அவரது அலைபேசியை போலீசார் ஆய்வு செய்ததில், 20க்கும் மேற்பட்ட பெண்களிடம் தனிமையில் இருந்த வீடியோ கண்டுபிடிக்கப்பட்டது.

கணவர் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய மனைவிஉத்தமபாளையம் : கம்பம் புதுப்பட்டி சாத்தாவு கோயில் வீதி முருகன் 57. இவர் வேலைக்கு செல்லாமல் மது குடித்து மனைவி சித்ரா (47)விடம் நேற்று தகராறு செய்தார். கணவன் மீது அடுப்பில் இருந்த கொதிக்கும் எண்ணெயை துாக்கி கொட்டியுள்ளார். இதில் முருகனின் வயிறு, கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. முருகன் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஆம்புலன்சில் உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். உத்தமபாளையம் போலீசார் மனைவி மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

ரூ.51.36 லட்சம் மதிப்பு கடத்தல் தங்கம் பறிமுதல்சென்னை : ஆசனவாயில் மறைத்து கடத்தி வரப்பட்ட, 51.36 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

துபாயிலிருந்து, சென்னைக்கு எமிரேட்ஸ் விமானம் நேற்று முன்தினம் வந்தது. அதில் வரும் நபர், தங்கம் கடத்தி வருவதாக, சுங்கத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அந்த தகவலின் அடிப்படையில், 28 வயது மதிக்கத்தக்க நபர், சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில், விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்றார்.அவரை இடைமறித்து, சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, தங்க பசை அடங்கிய மூன்று பொட்டலங்களை, அந்த நபர் ஆசனவாயில் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை பறிமுதல் செய்து மதிப்பிட்டத்தில், 51.36 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 1,055 கிராம் தங்கம் இருந்தது தெரிய வந்தது.

டி.எஸ்.பி.,யை ஏமாற்றியதாக பெட்ரோல் பங்க் மீது புகார்வில்லிவாக்கம்: பெட்ரோல் பங்கில் நுாதன முறையில் திருடுவதாக, லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., அளித்த புகாரின் மீது போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் லவகுமார், 52; லஞ்ச ஒழிப்பு துறையில், டி.எஸ்.பி.,யாக பணிபுரிகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு, வில்லிவாக்கம் எம்.டி.எச்., சாலையில் உள்ள, பெட்ரோல் பங்கில், தன் இருசக்கர வாகனத்திற்கு, 250 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்பியுள்ளார்.சில துாரம் சென்ற பின், இருசக்கர வாகனத்தில், பெட்ரோல் குறியீடு குறைவாக காண்பித்துள்ளது. இதுகுறித்து, பங்க் நிர்வாகத்திடம் டி.எஸ்.பி., முறையிட்டுள்ளார். இவர், போலீஸ் என தெரியாமல் ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.வில்லிவாக்கம் காவல் நிலையத்தில், டி.எஸ்.பி., புகார் அளித்தார். சம்பவம் தொடர்பாக, பாரத் பெட்ரோல் தலைமை நிறுவனத்திற்கு, போலீசார் புகரை பரிந்துரை செய்து விசாரித்து வருகின்றனர்.

பாலியல் தொந்தரவு: சிறுவன் கைதுபொன்னேரி : பழவேற்காடில், ஆறு வயது சிறுமிக்கு, பாலியல் தொந்தரவு கொடுத்த சிறுவனை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.

பழவேற்காடு பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவரின், ஆறு வயது மகள், நேற்று முன்தினம் மாலை, வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டு இருந்தார்.அதே பகுதியைச் சேர்ந்த, 14 வயது சிறுவன், விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை அழைத்து சென்று பாலியல் தொந்தரவு செய்து உள்ளார்.சிறுமியின் சத்தம் கேட்டு அவ்வழியாக சென்ற கிராமவாசி ஒருவர் அங்கு சென்று சிறுமியை மீட்டார். சிறுவன் தப்பியோடினான். அழுது கொண்டிருந்த குழந்தையை வீட்டிற்கு அழைத்து வந்து விசாரித்தபோது, சிறுவன் பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரிந்தது. இது குறித்து சிறுமியின் பெற்றோர், பொன்னேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்படி, போலீசார், நேற்று, சிறுவனை கைது செய்தனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (5)

 • Vittalanand -

  இவளல்லவோ படி தாண்டா பத்தினி ?

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  ஒரு கிலோ தங்கத்தை ஆசனவாயில் கடத்திய மர்ம நபர்....பெயர் என்னவாக இருக்கும்? உருவமே இல்லாமல் ஒருவன் இருப்பானே. அவன்பெயராக இருக்குமோ?

 • DVRR - Kolkata,இந்தியா

  அதானே பார்த்தேன் என்னடா இது ஒரு மனைவியை பாம்பு கடிக்க வைத்து கொலை செய்ததற்கு எப்போ 20 வருடம் முன்னாடி அதுக்கு இன்று தீர்ப்பு வந்ததே மனைவி மிகவும் அடங்கிப்போய் விட்டாலா என்ன என்று??

 • raja - Cotonou,பெனின்

  "இமானுவேல்ராஜா, 43. முகநுாலில் தன் பெயர் சிவசக்தி, சினிமா இயக்குனர் என போலியாக பதிவேற்றம் செய்து, பல பெண்களிடம் நடிக்க வைப்பதாகக் கூறி, 'தொடர்பு' வைத்துக் கொண்டார்" அத்துமீறி அடங்க மரு கிரிப்டோ கூட்டம் செய்யர வேலையை பார்த்தீங்களா?

 • raja - Cotonou,பெனின்

  மார்க்கம் ஒரு மார்க்கமாத்தான் இருக்கு அந்த ஆயிரம் ஐ டீ .. என்ன சொல்ல போறானோ....

Advertisement