dinamalar telegram
Advertisement

அக்.,14: பெட்ரோல், டீசல் விலை இன்று உயர்வு

Share
சென்னை: சென்னையில் இன்று (அக்.,14), பெட்ரோல் லிட்டருக்கு 102.10 ரூபாய், டீசல் லிட்டருக்கு 97.93 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பை அடுத்து, பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு அமலுக்கு வந்தது.
அதன்படி நேற்று சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ 101.79 ஆகவும், டீசல் லிட்டர் ரூ 97.59 ஆகவும் விற்பனையானது. இந்நிலையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 31 காசுகள் அதிகரித்து, ரூ 102.10 ஆகவும் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 34 காசுகள் அதிகரித்து, ரூ 97.93 ஆகவும் உள்ளது. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (6)

  • ஜெயந்தன் - Chennai,இந்தியா

    சாமானிய மக்களின் வலியைப் பற்றி கவலைப்படாத இந்த அரசு ....அதற்கான விலையை கொடுக்கும்....

  • ஜெயந்தன் - Chennai,இந்தியா

    இந்த ஆட்சி ஒழியும் நாளே...மக்களுக்கு உண்மையான திருநாள்....பட்டாசு வெடித்து கொண்டாடும் அளவிற்கு..

  • ஜெயந்தன் - Chennai,இந்தியா

    நாசமாய் போகட்டும் இந்த அரசு....சாமானியனின் சாபம் கண்டிப்பாக பலிக்கும்..விரைவில்..

  • jagadesh - chennai,இந்தியா

    அருமையான ராஜதந்திர நடவடிக்கை தொடரட்டும் உமது நடவடிக்கை,வாழ்க உமது புகழ்

  • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

    வெட்கங்கெட்டவன்க....😡😡 மக்களை வதைக்கும் அரசு... தட்டி கேட்க துப்பில்லாத ஊடகங்கள்... மத்த இடங்களில் வாய் வடை சுட்டு இந்த பக்கமே வராமல் மூக்கை சிந்திக்கிட்டே பெட்ரோல் போடும் ஒரு ஓட்டு பகோடாஸ்... யாருக்கும் வெட்கமில்லை...👎👎

Advertisement