dinamalar telegram
Advertisement

காய்கறிகள், பழங்கள், பூக்கள் விலை ‛விர் ; ஆயுத பூஜை எதிரொலி :

Share
Tamil News
ஆயுத பூஜையை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் காய்கறிகள், பூக்கள், பழங்கள் விலையும் அதிகரித்துள்ளது.

கடந்த வாரம் தக்காளி 3 கிலோ 50 ரூபாய்; வெங்காயம் 3 கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.நேற்று, கிலோ தக்காளி, 40 ரூபாய், வெங்காயம் 40 ரூபாய்க்கு விற்கப்பட்டது. பூசணிகாய் 15 ரூபாய்க்கு விற்கப்பட்டது.மல்லிகைப் பூ 500, முல்லை 350, சாமந்தி 150, கனகாம்பரம் 600, ரோஜா 150 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.உத்திரமேரூர்: உத்திரமேரூரில் பொரி கடலை, பழ வகைகள், பூசணி, திருஷ்டி பொம்மைகள், திருஷ்டி கயிறுகள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன.

பேன்ஸி ஸ்டோர்களிலும் அலங்கார தோரணங்கள், பிளாஸ்டிக் பூக்கள், மாலைகள், வண்ணமயமான காகிதங்கள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன.உத்திரமேரூர் வட்டாரத்தில் பூசணிக்காய் விளைச்சல் அதிகரித்துள்ளதால், சிறிய பூசணிக்காய், 20 ரூபாய்க்கும், பெரிய பூசணிக்காய் 50 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.திருத்தணி: இன்று, ஆயுத பூஜை, நாளை விஜயதசமி, நாளை மறுநாள் புரட்டாசி ஐந்தாம் சனிக்கிழமை என தொடர்ச்சியாக பண்டிகை வருவதால் திருத்தணியில் சாமந்தி விலை அதிகரித்துள்ளது.கடந்த வாரம் கிலோ, 45 - 60 ரூபாய் வரை விற்கப்பட்டது. நேற்று, கிலோ சாமந்தி, 150 - 200 ரூபாய் வரை விற்கப்பட்டது. டஜன் வாழைப்பழம் 60 ரூபாய், தேங்காய் 25 - 50 ரூபாய். ஒரு ஜோடி வாழைக்கன்று 100 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
- நமது நிருபர் குழு -
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement