dinamalar telegram
Advertisement

முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் உள்ளாட்சியில் வெற்றி

Share
முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் உள்ளாட்சியில் வெற்றிசெய்யூர் முன்னாள் தி.மு.க., - எம்.எல்.ஏ., - ஆர்.டி.அரசு, திருக்கழுக்குன்றம் ஒன்றியம், 16ம் வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க., வேட்பாளராக போட்டியிட்டார். செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., தலைவரும், திருப்போரூர் முன்னாள் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுமான தனபால், திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தின் 26ம் வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டார்.திருப்போரூர் ஒன்றியத்தில், திருப்போரூர் முன்னாள் தி.மு.க., - எம்.எல்.ஏ., இதயவர்மன், திருப்போரூர் ஒன்றியத்தில், 3ம் வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டார். தேர்தலில், இவர்கள் மூன்று பேரும் வெற்றி பெற்று, ஒன்றிய கவுன்சிலர்களாக தேர்வாயினர்.முன்னாள் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., தனபாலின் மனைவி காயத்ரி, திருக்கழுக்குன்றம் ஒன்றியம், கல்பாக்கம் புதுப்பட்டினம் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement