dinamalar telegram
Advertisement

ராட்சத மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

Share
கோடம்பாக்கம்--கோடம்பாக்கத்தில், ராட்சத மரம் முறிந்து ஆற்காடு சாலையின் நடுவே விழுந்ததால், கடும் போக்குவரத்து நேரிசல் ஏற்பட்டது.கோம்பாக்கம் ஆற்காடு சாலையில், மெட்ரோ ரயில் பணிகள் நடப்பதால், ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. ஒரு வழிப்பாதையான மாநகராட்சி மண்டல அலுவலகம் அருகில், ராட்சத மரம் ஒன்று, நேற்று மாலை சாலையின் நடுவே திடீரென விழுந்தது. இதனால், கோடம்பாக்கம் மேம்பாலத்தை நோக்கிச் செல்லும் வழியில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள், மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். இதனால், ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நேரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement